சிறுத்தை படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. அந்த படம் பெரிய வெற்றியை பெற்றதால் சிறுத்தை சிவா என்பதே அவரது அடையாளமாகி விட்டது. தொடர்ந்து அஜீத்குமார் நடித்த வீரம் விஸ்வாசம் விவேகம் வேதாளம் போன்ற படங்களை சிறுத்தை சிவா இயக்கினார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.
தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தை சிறுத்தை சிவா இயக்கினார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லை. படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தன. இருந்தாலும் இந்த படம் நட்சத்திர பட்டாளமே இருந்ததால் எப்படியோ லாபத்தை தந்துவிட்டது.
இந்த நிலையில் நடிகர் சூர்யா நடித்த கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்கினார். இந்த படம் 2000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் படத்தை பார்த்த ரசிகர்கள், இந்தியன் 2 படத்துக்கு போட்டியாக கங்குவா படம் முந்திவிட்டது. இப்படி ஒரு காட்டுமொக்கை படமா என கழுவி கழுவி ஊற்றிவிட்டனர்.
கங்குவா படத்துக்கு வந்த எதிர்மறை விமர்சனங்களில் நடிகர் சூர்யாவை காட்டிலும் அதிகம் பாதிக்கப்பட்டவர் சிறுத்தை சிவா தான். ஒரு படத்தின் இயக்குனராக இப்படியும் ஒரு படத்தை இயக்கி ரசிகர்களுக்கு தர முடியுமா? என்று சினிமா விமர்சகர்கள் சிறுத்தை சிவாவை கலாய்த்து தள்ளி விட்டனர்.
இதனால் கடந்த 2 ஆண்டுகளாக அடுத்த பட வாய்ப்பே இல்லாமல் சிறுத்தை சிவா போராடி வருகிறார். அவரை இயக்குனராக வைத்து படம் தயாரிக்க எந்த ஒரு தயாரிப்பாளரும் முன்வரவில்லை. அஜீத்குமார் நடித்த 4 படங்களை இயக்கியவர் என்பதால் அவரிடமும் பலமுறை கேட்டு பார்த்துவிட்டார். ஆனால் அஜீத்குமாரும் இப்போதைக்கு அது சாத்தியமில்லை என்று மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் நடிகர் தனுஷிடம் இயக்குனர் சிறுத்தை சிவா கதை சொல்லி இருக்கிறார். அவர் ஓகே சொன்ன நிலையில் அந்த படத்தை தயாரிக்க ஐசரி கணேஷ் மற்றும் சன் பிக்சர்ஸ் சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற நிறுவனங்கள் மறுத்து விட்டன. கடைசி நேரத்தில் தயாரிப்பாளர் லலித்குமார் ஓகே சொல்லி விட்டார். வரும் டிசம்பரில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ஷூட்டிங் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.





