- Advertisement -
இராமாயணம் படம் குறித்து பாலிவுட் மூத்த நடிகர் முகேஷ் கண்ணா கூறியிருப்பதாவது, நாங்கள் இதுபோன்ற இதிகாசக் கதைகளைக் கேட்டு வளர்ந்தவர்கள். சமீபகாலமாக சில ராமலீலா நிகழ்ச்சிகளிலும் கூட சீதை சண்டையிடுவது தற்காப்புக் கலைகளில் ஈடுபடுவது வாள் வீசுவது போன்ற புதிய காட்சிகள் சேர்க்கப்படுகின்றன. இதுபோன்ற செயல்களுக்குச் சம்பந்தப்பட்டவர்கள் வெட்கப்பட வேண்டும். சீதையை ஒரு போராளியாகச் சித்தரிப்பதன் மூலம் நவீன காலப் பெண்களைக் கவர முயற்சி நடக்கிறது. சிலர் இதை பெண்ணியம் என்கின்றனர். பெண்ணியம் குறித்து தனக்குப் பெரிய புரிதல் இல்லாவிட்டாலும், அது பெண்களை வலிமையானவர்களாகக் காட்ட முயல்வதை தான் மறுக்கவில்லை. நவீன நோக்கங்களுக்காக சீதையின் கதாபாத்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது. அது முற்றிலும் தவறான செயல் என்று நடிகர் முகேஷ் கண்ணா கடுமையாக விமர்சித்துள்ளார்.





