இன்று காலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஒரு வீடியோ வெளியானது. அதில் ஐகான் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் அவரது புதிய படத்தை இயக்குனர் அட்லி இயக்குவதையும், அதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதையும் அந்த வீடியோ உறுதி செய்தது. இது அட்லி இயக்கும் 6வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவில் சன் பிக்சர்ஸ் அலுவலகத்துக்கு வரும் நடிகர் அல்லு அர்ஜூன் இயக்குனர் அட்லி ஆகியோர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறனை நேரில் சந்தித்து பேசுகின்றனர். தொடர்ந்து அவருடன் கைகுலுக்கும் அவர் அமெரிக்காவில் லால் ஏஞ்சல்ஸ்சில் உள்ள மிக பிரபலமான விஎப்எக்ஸ் அலுவலகத்துக்கு செல்கின்றனர்.
அங்கு விஎப்எக்ஸ் தொழில்நுட்ப முறையில் உருவாகும் இந்த படம் குறித்து அங்குள்ள தொழில்நுட்ப வல்லுனர்களுடன் ஆலோசிக்கின்றனர். அப்போது அங்குள்ள பல தொழில்நுட்பங்களை பார்க்கின்றனர். மேலும் அல்லு அர்ஜூன் முகத்தோற்றம் உடல்பாவனை மற்றும் அவரது குரல் உள்ளிட்டவை இயக்குனர் அட்லி முன்னிலையில் அங்கு பதிவு செய்யப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 600 கோடி எனதத் தெரிய வந்துள்ளது. இதில் 2 விதமான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது இயக்குனர் அட்லிக்கு ரூ. 55 கோடி சம்பளம் மற்றும் 20 சதவீதம் பிராபர்ட்டி ஷேர் என்றும் படத்தின் ஹீரோ அல்லு அர்ஜூனுக்கு பிராபர்டி ஷேர் 30 சதவீதம் என்று கூறப்படுகிறது.
மேலும் இன்னொரு முக்கிய தகவலாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் கார்பரேட் நிறுவனம் என்பதால் இதுபோல் பிராபர்ட்டி ஷேர் எதுவும் தர வாய்ப்பில்லை என்றும் அட்லிக்கு ரூ. 110 கோடி, அல்லு அர்ஜூனுக்கு ரூ. 110 கோடி என சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் இந்த இரண்டு தகவல்களுமே இன்னும் உறுதிப்படுத்தபடவில்லை. வழக்கமான பெரிய இயக்குனர்கள் பெரிய நடிகர்கள் படங்கள் என்றாலே படத்தின் பாதி பட்ஜெட்டுக்கு மேல் அவர்களது சம்பளமே வந்துவிடுகிறது. மேலும் இசையமைப்பாளர் டெக்னிஷியன் ஒளிப்பதிவாளர் என பல கோடிகளில் சம்பளம் கேட்பதால், ரூ. 600 கோடி பட்ஜெட்டில் படத்தின் மேக்கிங் செலவு என்பது எத்தனை கோடி என்பதே ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.





