- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் கட்சிக்கு கேட்கப் போகும் தேர்தல் சின்னம் இதுதான், கட்சி சின்னத்துல தளபதி காட்டற...

நடிகர் விஜய் கட்சிக்கு கேட்கப் போகும் தேர்தல் சின்னம் இதுதான், கட்சி சின்னத்துல தளபதி காட்டற மாஸ் வேற லெவலா இருக்குதே…

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றி கழகம் தலைவராகி விட்டார். வரும் 2026ம் ஆண்டில் தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். தற்போது நடித்து வரும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தை முடித்த பின், மதுரையில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.

நடிகர் விஜயை பொருத்த வரை, சினிமாவில் தட்டுத்தடுமாறி முன்னேறி வந்ததை போல இல்லாமல், அரசியலில் எடுத்தவுடனே ராக்கெட் வேகத்தில் முன்னிலை பெற வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். ஏனெனில், சினிமாவில் அறிமுகமான போது விஜய்க்கு எஸ்ஏ சந்திரசேகர் என்ற அடையாளம் மட்டுமே இருந்தது. இன்று அவரது ரசிகர் படையுடன், தளபதி என்ற அடையாளம் இருக்கிறது.

- Advertisement -

கடந்த 40 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் திமுக அதிமுக மட்டுமே என இரண்டு திராவிட கட்சிகள் மட்டுமே நாட்டை ஆட்சி செய்து வந்திருக்கின்றன. அதற்கு முன் காமராஜர் ஆட்சி செய்த காலகட்டம், தமிழகத்தின் பொற்காலமாகவும், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சி செய்த 11 ஆண்டு காலம், மக்களின் வசந்த காலமாகவும் இருந்திருக்கிறது.

ஆனால் ஜெயலலிதா, கருணாநிதி, ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் என இவர்களது ஆட்சி காலத்தில், மக்களிடம் இருந்து விலை மதிப்பற்ற ஓட்டுகளை வாங்க, இலவச திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றிய அவர்களது ஓட்டு அரசியலை, இன்றைய இளைஞர்கள், இளைஞிகள் குறிப்பாக மாணவ, மாணவியர் தெளிவாக புரிந்துக்கொண்டு விட்டனர்.

- Advertisement -

அதனால் பள்ளி இறுதியிலும், கல்லூரி முதலாம் ஆண்டிலும் சேரும் மாணவ, மாணவியர், முதல் முறையாக தேர்தலில் ஓட்டுப் போடும் புதிய வாக்காளர்கள், திராவிட ஆட்சியை வெறுக்கும் பொதுவான மக்கள் என, அவர்களது ஓட்டு பெருவாரியாக விஜய் பக்கம்தான் என்பதில் சந்தேகமே இல்லை.

அதனால் மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்கள் கவனத்தை பெறும் விதமாகவும், எதிர்கால சமுதாயத்தின் மீதும், கல்வி நலனில் அதிக அக்கறை கொண்டவர் விஜய் என்பதாலும் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் சின்னமாக, கட்சியின் அடையாள சின்னமாக புத்தகம், பேனா, அல்லது பள்ளிக்கூடம், வகுப்பறை, கரும்பலகை, மாணவ, மாணவியர் என இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்தல் சின்னமாக பெற திட்டமிட்டுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்