- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரமோ ஷூட்டிலேயே ரூ. 15 லட்சம் பட்ஜெட்டை ரூ. 25 லட்சமாக எகிற வைத்த இயக்குனர்...

பிரமோ ஷூட்டிலேயே ரூ. 15 லட்சம் பட்ஜெட்டை ரூ. 25 லட்சமாக எகிற வைத்த இயக்குனர் வெற்றிமாறன் – திகைத்து திக்குமுக்காடி போன படக்குழு!

- Advertisement -

விடுதலை விடுதலை 2 படங்களை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக வாடிவாசல் படத்தை தான் இயக்க திட்டமிட்டு இருந்தார். தயாரிப்பாளர் எஸ் தாணு தயாரிப்பில் சூர்யா அமீர் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சூர்யா போட்ட சில கண்டிசன்களால் அந்த படம் டிராப் ஆகி விட்டது.

இப்போது இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் புதிய படம் ஒன்றை டைரக்ட் செய்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ் தாணு தான் தயாரிக்கிறார். வாடிவாசல் படத்தை இயக்க வாங்கிய சம்பளத்தில், இந்த படத்தை வெற்றிமாறன் இயக்குவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த படத்தின் பிரமோ ஷூட்டிங் சமீபத்தில் சென்னை எக்மோர் பகுதியில் நடந்தது. பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் இருந்த பகுதி இப்போது போலீஸ் மியூசியம் ஆக மாற்றப்பட்டுள்ளது. அங்குதான் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் பிரமோ டெஸ்ட் ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது.

அங்கு ஒரு மணி நேரம் படப்பிடிப்புக்கு இரண்டரை லட்சம் ரூபாய் என வாடகை பேசப்பட்டு, ஒரு நாளுக்கு 15 லட்சம் ரூபாய் வாடகை கட்டணம் நிர்ணயித்து டெஸ்ட் ஷூட்டிங் நடந்துள்ளது. இதில் சிம்பு இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காலை முதல் மதியம் வரை எடுக்கப்பட்ட காட்சிகளை, மதிய உணவு இடைவேளையின் போது இயக்குனர் வெற்றிமாறன் மானிட்டரில் பார்த்திருக்கிறார்.

- Advertisement -

அதுவரை எடுத்த காட்சிகளில் திருப்தி அடையாத வெற்றிமாறன், மீண்டும் காலையில் எடுக்கப்பட்ட காட்சிகளையே மதியத்துக்கு பிறகும் ரி ஷூட் செய்து அதே காட்சிகளை மீண்டும் படமாக்கி இருக்கிறார். இதனால் ஒரு நாளில் முடிய வேண்டிய பிரமோ டெஸ்ட் ஷூட்டிங் 2 நாட்களுக்கு நடத்தப்பட்டுள்ளது. இதனால் ரூ. 15 லட்சம் திட்டமிட்ட வாடகை கட்டணம் ரூ. 25 லட்சமாக பட்ஜெட்டில் எகிறி இருக்கிறது.

மதியம் வரை எடுத்த காட்சிகளை வெற்றிமாறன் நிராகரிக்க காரணம் சிம்புவின் ஹேர் ஸ்டைல் சரியாக இல்லை. அதனால் மீண்டும் அந்த காட்சிகளை வெற்றிமாறன் ரி ஷூட் செய்ததால் ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில் அதிகரித்துள்ளது. பிரமோவுக்கான டெஸ்ட் ஷூட்டிங்கிலேயே இப்படி ஒரு சம்பவத்தை செய்தவர், படத்தை முடிக்கும் வரை எத்தனை கோடி ரூபாய் பட்ஜெட்டில் எகிற வைப்பாரோ என படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்