தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான தனுஷ் அடுத்ததாக நடித்து வரும் படம் “கேப்டன் மில்லர்” அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் அவருடன் பிரியங்கா மோகன், நிவேதா சதீஷ், ஜான் கொக்கைன், சிவராஜ் குமார் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட், ஹாலிவுட் என பெரிய உயரத்தை எட்டியுள்ள தனுஷ் அடுத்ததாக தனது மிரட்டலான நடிப்பின் மூலம் இந்த கேப்டன் மில்லரில் அனைவரையும் மிரட்ட தயாராக உள்ளார் என்று கூறப்படுவதால் இந்தப் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது.
அதன்படி சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த “கேப்டன் மில்லர்” படப்பிடிப்புக்கு மத்தியில் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த படத்தின் டீசர் வெளியீடு ஜூலை 28-ஆம் இருக்கும் என்று படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கேப்டன் மில்லர் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு டீசர் வெளியாகும் நேரத்தையும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது. அதன்படி ஜூலை 28-ஆம் தேதி இரவு நள்ளிரவு 12.01 மணிக்கு டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 28-ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
இப்படி சூப்பர் ஸ்டார் நடித்துள்ள ஜெயிலர் படத்திற்கு போட்டியாக தற்போது தனுஷ் தரப்பில் இருந்து இந்த கேப்டன் மில்லர் டீசர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த டீசரின் புகைப்படத்தில் தனுஷ் கோபத்துடன் துப்பாக்கியை பிடித்து சுட்டுக் கொண்டே கத்துவது போல போஸ்டர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.





