- Advertisement -
Homeபொழுதுபோக்கு34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் திரைப்படம்... புதிய...

34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் திரைப்படம்… புதிய தொழில்நுட்பத்தில் பட்டையைக் கிளப்பும் ட்ரெய்லர்… பொக்கிஷங்களை பகிர்ந்த இயக்குனர் செல்வமணி….

- Advertisement -

விஜயகாந்த் நடித்த திரைப்படங்களில் ஏராளமான படங்கள் 100 நாட்களைக் கடந்து ஓடி இருக்கின்றன. பல்வேறு திரைப்படங்களும் அவருக்கு மகத்தான பெயரைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றன. காலம் போற்றும் திரைப்படங்களாகவும் அவை பேசப்பட்டு வருகின்றன. இந்த பட்டியலில் மிக முக்கியமான திரைப்படம் கேப்டன் பிரபாகரன்.

விஜயகாந்தின் நூறாவது திரைப்படமாக இது வெளியானது. ஆர் கே செல்வமணி இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். வீரபத்திரன் என்னும் கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மன்சூர் அலிகான். இதுபோக ரம்யா கிருஷ்ணன் லிவிங்ஸ்டன் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த திரைப்படத்தில் இடம்பெற்று இருந்தார்கள்.

- Advertisement -

இளையராஜா இசையமைப்பில் ஆட்டமா தேரோட்டமா மற்றும் பாசமுள்ள பாண்டியரே என இரண்டு பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தன. 1991 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் அந்த திரைப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.

அதன்படி வரும் 22 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. புதிய தொழில்நுட்பம் 4k தரத்துடன் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது கேப்டன் பிரபாகரன். இதற்கான ட்ரெய்லர் வெளியிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. முன்னோட்டம் வெளியீட்டு விழாவில், அதன் இயக்குனர் ஆர் கே செல்வமணி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

அதில், முதலில் இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதில் சரண்யா பொன்வண்ணன் தான் நடித்தார். ஆனால் பல்வேறு சிக்கல்கள் காரணமாக அவர் படத்தில் இருந்து விலகினார். பிறகுதான் ரம்யா கிருஷ்ணன் உள்ளே வந்தார். முதலில் விஜயகாந்தின் 94-வது திரைப்படமாகத்தான் இது எடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஷூட்டிங் பணிகளில் தாமதம் ஏற்பட்டது.

படத்தில் நடித்த சரத்குமாருக்கும் அடிபட்டது. அப்படி என்றால் அவர் நடித்த காட்சிகளில் வேறு ஒருவரை நடிக்க வைக்கலாம் என்று பேசியபோது இல்லை இல்லை அவரே இருக்கட்டும் என்று கூறினார் கேப்டன் விஜயகாந்த். இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை எடுத்துக் கொண்டிருந்த போதுதான், விஜயகாந்திற்கு மகன் பிறந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு விஜய பிரபாகரன் என பெயர் வைக்கப்பட்டது. தற்போது 34 ஆண்டுகள் கழித்து அவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார் என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்