- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித்தை தொடர்ந்து வெளிநாட்டுக்கு பறந்த விஜய், அதுவும் அதே நாட்டுக்கா?, அப்போ தளபதி 68 நிலைமை?

அஜித்தை தொடர்ந்து வெளிநாட்டுக்கு பறந்த விஜய், அதுவும் அதே நாட்டுக்கா?, அப்போ தளபதி 68 நிலைமை?

- Advertisement -

“விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற ஆவலில் ரசிகர்கள் இருக்கும்போது அஜித் பல நாடுகளுக்கு பைக்கில் ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட அஜித் நார்வே நாட்டிற்குச் சென்றதாக செய்திகள் வெளிவந்தன. ஒரு பக்கம் ரசிகர்கள் “விடாமுயற்சி” குறித்த கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள், ஆனால் அஜித்தோ அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஹாயாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்று பேச்சுக்கள் அடிபடுகின்றது.

இந்த நிலையில் “லியோ” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் லண்டன் சென்றுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்தது. ஆனால் தற்போது இதன் உண்மைத் தன்மை குறித்து வெளிவந்துள்ளது.

அதாவது விஜய் லண்டனுக்குப் போகவில்லையாம். நார்வே நாட்டிற்கு போயிருக்கிறாராம். அதே போல் நடிகை திரிஷாவும் நார்வே நாட்டிற்குப் போயுள்ளதாக தகவல் வருகிறது. ஆகையால் “தளபதி 68” திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகும் சூழலில் இருப்பதாக விஜய் ரசிகர்கள் அஞ்சுகின்றனர்.

ஆனால் “தளபதி 68” திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. வெங்கட் பிரபு இயக்கும் இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது.

மேலும் இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த தகவல் ஓரளவு உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதாவது அக்டோபர் மாதம் முழுக்க ஜோதிகாவிடம் கால்ஷீட் வாங்கியுள்ளார்களாம். ஆதலால் உறுதியாக ஜோதிகாதான் “தளபதி 68” திரைப்படத்தின் கதாநாயகி என்று கூறுகிறார்கள்.

இவ்வாறு “தளபதி 68” திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த எந்த தகவலும் இல்லையே என்று அஜித் ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.

சற்று முன்