- Advertisement -
Homeபொழுதுபோக்குகொரோனா காலத்தில் கோவித் தடுப்பூசி குறித்து விமர்சித்த நடிகர் மன்சூர் அலிகான் - சென்னை உயர்நீதிமன்றம்...

கொரோனா காலத்தில் கோவித் தடுப்பூசி குறித்து விமர்சித்த நடிகர் மன்சூர் அலிகான் – சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் மன்சூர் அலிகான். ஏராளமான படங்களில் அவர் வில்லனாக நடித்திருக்கிறார். சில படங்களில் அவர் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். திரைப்பட தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் மன்சூர் அலிகான் இருந்து வருகிறார். அரசியல் களத்திலும் அவர் ஆர்வமாக இருந்து வருகிறார்.

கடந்த 2021ம் ஆண்டில் கோவித் பெருந்தொற்று காலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாள் நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இது தமிழ்நாடு முழுவதும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

- Advertisement -

அப்போது அவரைப் பார்க்க அந்த மருத்துவமனைக்குச் சென்ற நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் கோபமாக சில கருத்துக்களை பேசி இருந்தார். குறிப்பாக கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துக்களை மன்சூர் அலிகான் தெரிவித்து இருந்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசின் மக்கள் நலப் பணிக்கு எதிராக இருப்பதாக கூறி நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அலுவலர் பூபேஷ் என்பவர், வடபழனி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

- Advertisement -

அதன் அடிப்படையில் பொது அமைதியை கெடுத்தல் தொற்று நோயை பரப்பும் தீய எண்ணத்துடன் நடந்து கொள்ளுதல் தவறான கருத்துக்களை பொதுமக்கள் இடையே பரப்புவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் மன்சூர் அலிகான் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் தனக்கு எதிரான புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தவில்லை எனவும் தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பாத நிலையில் தனது பேட்டியை தவறாக புரிந்து கொண்டதாகவும் அதில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி இளந்திரையன், நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து இன்று உத்தரவிட்டார்.

- Advertisement -

சற்று முன்