- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர்கள் ரசிகர் மன்றங்கள் நடத்துவது இதற்காக தான், இதுகூட தெரியலையா? - சீக்ரெட்டை போட்டுடைத்த பிரபலம்!

நடிகர்கள் ரசிகர் மன்றங்கள் நடத்துவது இதற்காக தான், இதுகூட தெரியலையா? – சீக்ரெட்டை போட்டுடைத்த பிரபலம்!

- Advertisement -

திரையில் தோன்றும் பிம்பங்களை பார்த்து நிஜம் என்று ஏமாறும் கூட்டம் தான் ரசிகர் மன்றங்களை அமைக்கின்றன. ஒரு படத்தை ஒரு பொழுதுபோக்கு அம்சமாக பார்த்து விட்டு நகரும் மக்கள் யாரும் ரசிகர் மன்றத்தில் சேருவதில்லை. அந்த நடிகனுக்காக கோஷம் இடுவதில்லை. கொடி பிடிப்பது இல்லை.

ஆனால் தமிழ்நாட்டில் நடிகனுக்காக தன் வாழ்க்கையை தொலைத்துக் கொள்ளும் நிறைய பேர் இருக்கின்றனர். அவர்களை வைத்து அந்த நடிகர்கள் நிறைய விதங்களில் பயனடைகின்றனர். ஏன் ஆட்சியை பிடிப்பதற்கு கூட அந்த ரசிகர்கள் தான் காரணமாகின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணரும்போது காலம் கடந்து விடுகிறது.

- Advertisement -

இதுகுறித்து திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, இன்னைக்கு இருக்கிற கமல் ரஜினி அஜித் விஜய் அவங்க ரசிகர் மன்றத்தை கலைச்சிட்டாங்க. கலைச்சிட்டு என்ன சொல்றாங்கன்னா உங்க புள்ள குட்டிகளை படிக்க வையுங்க. குடும்பத்தை பார்த்துக்கோங்க.

நாங்க கூத்தாடிங்க. எங்க பின்னாடி சுத்தாதீர்கள் அப்படின்னு அட்வைஸ் பண்றாங்க. அடங்கொய்யால நீங்க அவ்வளவு நல்லவங்களா? உங்கள் ரசிகர் மேல அவ்வளவு அக்கறையா? அதெல்லாம் கிடையாது. ஆரம்பகாலத்தில் இவங்க போஸ்டர் அடிக்க பாலாபிஷேகம் பண்ண இவங்களுக்கு போட்டியா இருக்கிற நடிகரோட ரசிகர்கள் கிட்ட சண்ட போட ஆள் வேணும்.

- Advertisement -

இப்படித்தான் எல்லா ரசிகர் மன்றத்தையும் வளர்த்து வெச்சிருந்தாங்க. இன்னைக்கு அவங்க நல்லா வளர்ந்துட்டாங்க. இனிமே ரசிகர்கள் தேவை கிடையாது. பெரிய நடிகராகியும் ரசிகர் மன்றம் சங்கம் நடத்திக்கிட்டு இருக்காங்கன்னா சிஎம் ஆகணும் பிஎம் ஆகணும்ன்னு மனசுக்குள்ள இருக்கும்.

அதுவரைக்கும் உங்களுக்கு கொம்பு சீவி விட்டுட்டு தான் இருப்பாங்க என்று ப்ளூ சட்டை மாறன் தனது பதிவில் கூறியிருக்கிறார். அன்று பெரிய போட்டியாளர்கள் போல எதிரும் புதிருமாக இருந்த அஜீத் – விஜய் இன்று நண்பர்களாக நெருக்கம் காட்டும் நிலையில் இந்த பதிவு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்