கமல் ஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. மொத்தம் 400 கோடி ரூபாய்க்கும் மேல் அந்தப் படம் வசூலித்ததாக கூறப்பட்டது. இதன் காரணமாக கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக மாறிவிட்டார் லோகேஷ். தற்போது அதிக சம்பளம் பெறும் இயக்குநராகவும் அவர் மாறியிருக்கிறார் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
விக்ரம் படத்துக்கு பிறகு விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கடந்த மாதம் முடிவடைந்தது. அக்டோபர் 19ஆம் தேதி படம் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையமைத்திருக்கிறார்.
படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. விஜய் அமெரிக்காவிலிருந்து விரைவில் திரும்பி டப்பிங் கொடுக்கவிருக்கிறார். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இந்த மாதம் 30ஆம் தேதி நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த விழாவில் ரஜினிக்கு எதிராக விஜய் குட்டி ஸ்டோரி சொல்வாரா என்ற கேள்வியையும் ரசிகர்கள் இப்போதே கேட்க ஆரம்பித்திருக்கின்றனர்.
இதற்கிடையே விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூன் 22ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், நா ரெடிதான் என்ற சிங்கிள் பாடலும் வெளியானது. பாடலை விஜய்யும், அசல் கோளாறும் பாடியிருந்தனர். 600க்கும் மேற்பட்ட டான்ஸர்கள் ஆடியிருந்த அந்தப் பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. வரவேற்பைப் எந்த அளவு பெற்றதோ அதே அளவு சர்ச்சையையும், விமர்சனத்தையும் சந்தித்தது.
வாயில் சிகரெட்டுடன் விஜய் ஆடியிருந்த நடனம், ‘பத்தாது பாட்டில் நான் குடிக்க அண்டாவ கொண்டாடா சியர்ஸ் அடிக்க, மில்லி உள்ள போனா போதும் கில்லி வெளில வருவான் பார்’ போன்ற பல வரிகள் கடும் கண்டனத்தை சம்பாதித்தன. இதனையடுத்து இந்த வரிகளை நீக்க வேண்டும் என பலரும் குரல் எழுப்ப தொடங்கினர்.
நான் ரெடியா பாடலில் வரிகளை மாற்ற உத்தரவு.
நீதி வென்றுவிட்டது.தணிக்கை குழுவிற்கு மிக்க நன்றி.@actorvijay@Dir_Lokesh @7screenstudio
எனது புகாரை ஏற்று நான் எடுத்து கூறிய சமூகத்திற்கு எதிரான பாடல் வரிகள் நீக்கபட்டது. எமது சமூகப் பணியும் சட்டப் போராட்டங்களும் அடுத்த தலைமுறை… pic.twitter.com/aJWnPw38u3
— ராஜேஸ்வரி பிரியா (@Rajeswaripriya3) September 9, 2023
இந்நிலையில் அந்தப் பாடலிலிருந்து சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்பட்டிருக்கின்றன. இதனையடுத்து இந்தப் பிரச்னையில் குரல் கொடுத்தவர்களில் ஒருவரான ராஜேஸ்வரி ப்ரியா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் ரெடியா பாடலில் வரிகளை மாற்ற உத்தரவு. எனது புகாரை ஏற்று நான் எடுத்து கூறிய சமூகத்திற்கு எதிரான பாடல் வரிகள் நீக்கபட்டது. எமது சமூகப் பணியும் சட்டப் போராட்டங்களும் அடுத்த தலைமுறை நலனுக்காக தொடரும்…. உண்மை பணத்தைவிட வலிமையானது.நீதி வென்றுவிட்டது.தணிக்கை குழுவிற்கு மிக்க நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.





