மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. அந்த வரிசையில் 2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் குறித்த அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. இந்த பத்ம விருதுகள் பட்டியலில் மொத்தம் 131 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 13 பேருக்கு பத்மபூஷண் விருதுகள், 5 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளன.
கலை அறிவியல் இலக்கியம் மருத்துவம் கல்வி விளையாட்டு தொழில்நுட்பம் சமூக நலன் பொதுப்பணிகள் தொழில் மற்றும் இதர பிரிவுகளில் குறிப்பிடதக்க வகையில் பணிகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. இந்த 2026ம் ஆண்டில் சினிமா துறையில் இருந்து பத்ம விருதுகள் பெறும் பட்டியலில் இடம் பிடித்தவர்கள் விவரம் தெரிந்துக்கொள்ளலாம்.
பத்ம பூஷண் விருது – கேரளாவை சேர்ந்த மலையாள நடிகர் மம்முட்டி, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அல்கா யாக்னிக் மற்றும் பியூஸ் பாண்டே கர்நாடகாவை சேர்ந்த ஆர் கணேஷ் ஆகியோர் பெற உள்ளனர். பத்மா விபூஷண் விருது – மகாராஷ்டிரத்தை சேர்ந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திர சிங் தியோல், உத்தரப்பிரதேசம் என் ராஜம் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பத்மஸ்ரீ விருது – தமிழ்நாட்டை சேர்ந்த காயத்ரி பாலகிருஷ்ணன், ரஞ்சனி பாலகிருஷ்ணன் ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், குரும்பா ஓவியக் கலைஞர் ஆர் கிருஷ்ணன், சிலை வடிப்பாளர் ராஜஸ்தபதி காளிப்ப கவுண்டர் மிருதங்க வித்வான் பக்தவச்சலம், நடிகர் மாதவன் ரங்கநாதன், ஆந்திராவை சேர்ந்த மகன்டி முரளி மோகன், உத்தரபிரதேசம் அணில் குமார், குஜராத்தைச் சேர்ந்த அரவிந்த் வைத்தியா தெலுங்கானாவைச் சேர்ந்த தீபிகா ரெட்டி ஆகியோர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
மத்திய அரசின் சார்பில் தமிழ்நாட்டில் 5 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் புண்ணியமூர்த்தி நடேசன், மிருதங்க வித்துவான் திருவாரூர் பக்தவச்சலம், ஆன்மீகம் மற்றும் கலைத் துறையில் திருத்தணி ஓதுவார் சுவாமிநாதன், சிலை வடிப்பதில் சிறப்பு பங்களிப்பு செய்து வரும் சேலம் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், குரும்பா பழங்குடியின ஓவியக் கலைஞர் நீலகிரி ஆர் கிருஷ்ணன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த பத்ம விருதுகள் பட்டியலில் மலையாள நடிகர் மோகன்லால், தமிழ் நடிகர் மாதவன் மற்றும் மறைந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திரா சிங் தியோல் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மறைந்த இந்தி நடிகர் தர்மேந்திர சிங் தியோலுக்கு பத்ம விபூஷண் விருதும் நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருதும் மலையாள நடிகர் மம்முட்டிக்கு பத்மபூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





