- Advertisement -
Homeபொழுதுபோக்குகலையில் அரசியலை முன் நிறுத்தலாமா? நடிகர் கமல்ஹாசனுக்கே இப்படி ஒரு நிலமையா? அவரது அருமை நண்பர்...

கலையில் அரசியலை முன் நிறுத்தலாமா? நடிகர் கமல்ஹாசனுக்கே இப்படி ஒரு நிலமையா? அவரது அருமை நண்பர் ரஜினிகாந்த் கூட இதை தட்டிக் கேட்கலையா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் இதுவரை 236 படங்களில் நடித்திருக்கிறார். அடுத்ததாக அவர் ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்கத்தில் தனது 237வது படத்தில் நடிக்க உள்ளார். வருகிற ஜூன் 5ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் சிம்பு திரிஷா அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்த தக்லைஃப் படம் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் ஒரு சகாப்தமாக வாழ்ந்து வருகிறார். 5 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் தனது திரை பயணத்தை துவங்கிய அவர் 70 வயதிலும் தன்னிகரற்ற ஒரு கலைஞராக இருந்து வருகிறார். மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும், சிறந்த நடிகர் என்ற தேசிய விருதையும் 3 முறை பெற்றிருக்கிறார். இதுதவிர அவரது சாதனைகளுக்கு பல விருதுகள் அவருக்கு தேடி வந்திருக்கின்றன.

சில தினங்களுக்கு முன்மும்பையில் வேவ்ஸ் உலக ஆடியோ விஷூவல் பொழுதுபோக்கு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்திய சினிமாவின் வளர்ச்சி மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டது.

இந்த மாநாட்டில் இந்திய சினிமாவில் பல்வேறு மொழிகளை சேர்ந்த நடிகர்கள் நடிககைகள் கலந்துக்கொண்டனர். குறிப்பாக தமிழில் ரஜினிகாந்த் மலையாளத்தில் மோகன்லால் இந்தியில் ஹேமமாலினி அக்சய் குமார் மிதுன் சக்கரவர்த்தி தெலுங்கில் சிரஞ்சீவி என பலர் பங்கேற்றனர். மேலும் அரசியல் பிரமுகர்கள் சினிமாத்துறையினர் தொழில்துறை தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ஆனால் இந்திய சினிமாவின் வளர்ச்சிக்காக நடந்த இந்த முக்கிய மாநாட்டில் பங்கேற்க நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய அரசு அழைப்பு விடவில்லை. அவரும் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. இதற்கு காரணம் மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ள கமல்ஹாசன், காங்கிரஸ் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் அவரும் அங்கம் வகிக்கிறார். இந்த ஒரு அரசியல் காரணத்துக்காவே கமல் என்னும் அந்த மகா கலைஞனை மத்திய பாஜக அரசு இந்த மாநாட்டுக்கு அழைக்காமல் தவிர்த்திருக்கிறது.

இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், தனது நண்பர் கமல்ஹாசனை ஏன் மாநாட்டுக்கு அழைக்கவில்லை என்று கேட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும் இந்த மாநாட்டில் மலையாள நடிகர் பிருத்விராஜூம் தவிர்க்கப்பட்டுள்ளார். ஏனெனில் எல்2 எம்புரான் படத்தில் பாஜக அரசுக்கு எதிரான காட்சிகளை அவர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. நல்ல கலைஞர்களை ஊக்குவிப்பதும், இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க வைப்பதும் அந்த கலையை வாழ வைக்கும் வளர்ச்சியடைய வைக்கும். முகஸ்துதி பாடும் நடிகர்கள் பங்கேற்பதால் சினிமாவுக்கு என்ன லாபம் என்று ரசிகர்கள் பலரும் புலம்புகின்றனர்.

சற்று முன்