- Advertisement -
Homeபொழுதுபோக்குசந்திரமுகி 2 ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?.. முழு விவரம் உள்ளே.. எல்லோரும் ரெடியாகுங்க

சந்திரமுகி 2 ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?.. முழு விவரம் உள்ளே.. எல்லோரும் ரெடியாகுங்க

- Advertisement -

பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. கேரளாவில் பாசில் இயக்கத்தில் வெளியான மணிசித்திரத்தாழு என்ற படத்தின் ரீமேக் உரிமையை வாசு வாங்கி அதனை கன்னடத்தில் செய்து பிறகு தமிழுக்கு கொண்டு வந்தார். ரஜினிகாந்த், ஜோதிகா, வடிவேலு, நயன்தாரா, நாசர் என நட்சத்திர பட்டாளமே நடித்தது.

சந்திரமுகி படத்துக்கு முன்னர் ரஜினிகாந்த் நடித்திருத பாபா படம் படுதோல்வியை சந்தித்திருந்தது. எனவே ரஜினிகாந்த்தின் கரியர் அத்துடன் முடிந்துவிட்டதாக பலரும் கூறினர். ஆனால் இரண்டு வருடங்கள் பொறுமையாக இருந்து இந்தப் படத்தை தேர்ந்தெடுத்து நடித்தார் ரஜினி. படம் 800 நாட்களுக்கு மேல் ஓடி பெரும் சாதனை படைத்து ரஜினியின் கம்பேக்காக அமைந்தது.

- Advertisement -

சூழல் இப்படி இருக்க பி.வாசு சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கியிருக்கிறார். இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, ராதிகா, ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். கடந்த வாரம் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

சந்திரமுகி முதல் பாகத்தின் வெற்றிக்கு ரஜினி ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம் ஜோதிகா. அவர் கங்கா கதாபாத்திரத்தில் சாந்தமாக இருந்து சந்திரமுகியாக மாறும்போது ரசிகர்களை தனது நடிப்பால் மிரட்டிவிடுவார். அவரது நடிப்பை பார்த்த பலரும் வாயடைத்து போனார்கள். எனவே இந்தப் படத்திலும் சந்திரமுகி கதாபாத்திரம் வெயிட்டாக இருக்கும் என எண்ணி ரசிகர்கள் சென்றனர்.

- Advertisement -

ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு தவிடு பொடியானது. கங்கனா ரணாவத் சந்திரமுகி கதாபாத்திரத்துக்கு சுத்தமாக செட் ஆகவில்லை. மேக்கப்பாகட்டும், நடிப்பாகட்டும் பார்க்கவே சகிக்கவில்லை என ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்கின்றனர். அதேபோல் இன்னொரு வெயிட்டேஜான கதாபாத்திரம் வேட்டையன். முதல் பாகத்தில் ரஜினிகாந்த் அந்த கதாபாத்திரத்தில் அதகளம் செய்திருப்பார். ஆனால் லாரன்ஸோ இதில் காமெடி செய்திருக்கிறார் என்கின்றனர் ரசிகர்கள்.

இப்படி படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்தது. எனினும் இதுவரை 28 கோடி ரூபாய் வசூலித்திஉப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சந்திரமுகி 2 ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி நவம்பர் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் சந்திரமுகி 2 நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்