தமிழ் மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது சீசன் 4 வரை வந்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனில் இருந்து ரசிகர்களின் இதயம் கவர்ந்த கோமாளியாக இருந்த பாலா, இந்த நான்காம் சீசனில் பங்குகொள்ளவில்லை. அதே போல் சில வாரங்களே வந்த மணிமேகலை, திடீரென இந்த நிகழ்ச்சியை விட்டு விலகினார்.

இதனால் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தார்கள். ஆனால் அதே ரசிகர்கள் ஆச்சரியப்படும் விதமாக ஒரு சம்பவம் நடந்தது என்னவென்றால், அது இதுவரை கோமாளியாக இருந்த சிவாங்கி குக்காக மாறியதே. முதல் சீசனில் இருந்து ரசிகர்களை மகிழ்வித்த கோமாளியாக வலம் வந்த சிவாங்கி, இந்த நான்காம் சீசனில் குக்காக நுழைந்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த இம்யூனிட்டு சுற்றில், யார் ஜெயிக்கிறாரோ அவர் டாப் 5க்கு தேர்வாகிவிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதற்காக நடத்தபட்ட போட்டியில் சிவாங்கி இம்யூனிட்டியை வென்று டாப் 5க்கு தேர்வாகிவிட்டார். குக் வித் கோமாளி சீசன் 4-ன் டாப் 5க்குள் செல்லும் முதல் கன்டெஸ்டன்ட் சிவாங்கிதான்.

சிவாங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்குபெற்றவர். அவரது குரலுக்கு பல ரசிகர்கள் உண்டு. அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இவ்வாறு பல வருடங்களாக விஜய் தொலைக்காட்சியின் செல்லப்பிள்ளையாகவே சிவாங்கி வலம் வருகிறார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜட்ஜாக இருக்கும் வெங்கடேஷ் பட், சிவாங்கியை தனது குழந்தை போலவே பார்த்து அன்பு செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் சிவாங்கி முதல் ஆளாக டாப் 5க்குள் போனது சந்தேகத்திற்கு இடமளிப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். இதனை தொடர்ந்து இது குறித்து செஃப் வெங்கடேஷ் பட் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, “அப்பா-மகள் போல் சிவாங்கியுடன் நான் பழகி வந்தாலும் அது போட்டிக்கு வெளியேதான். போட்டி என்று வந்துவிட்டால் அவர்கள் சமைப்பதை வைத்துத்தான் முடிவுகள் வழங்கப்படுகிறது” என்று தெரிவித்து இருக்கிறாராம்.





