- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி படம் டிராப்? படப்பிடிப்பில் ஈடுபாடு இல்லாமல் மோட்டார் சைக்கிளே கதி என்று இருக்கும் அஜித்?...

விடாமுயற்சி படம் டிராப்? படப்பிடிப்பில் ஈடுபாடு இல்லாமல் மோட்டார் சைக்கிளே கதி என்று இருக்கும் அஜித்? அதிர்ச்சியை கிளப்பும் தகவல்…

- Advertisement -

அஜித் தனது 62 ஆவது திரைப்படத்தில் மகிழ் திருமேனியுடன் கைக்கோர்க்கவுள்ளார் என்ற அறிவிப்பும் அத்திரைப்படத்தின் பெயர் “விடாமுயற்சி” என்ற அறிவிப்பும் வெளிவந்து பல நாட்கள் ஆகியும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளிவராமலேயே இருக்கிறது.

“ஏகே 62” புராஜெக்ட்டில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறிய பிறகு மகிழ் திருமேனி “விடாமுயற்சி” என்ற டைட்டிலோடு நுழைந்தார். மகிழ் திருமேனியின் திரைப்படங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவ்வாறு ஒரு பிரபலமான இயக்குனர் அஜித்துடன் இணைந்துள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

- Advertisement -

ஆனால் டைட்டில் அறிவிப்பிற்கு பிறகு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. மாறாக அஜித் குமார் புதிதாக “ஏகே மோட்டோ ரைட்” என்ற பைக் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக ஒரு அறிவிப்பு வெளிவந்தது. ஏற்கனவே அஜித்குமார் “பரஸ்பர மரியாதை பயண”த்தில் இந்தியா முழுவதிலும் உள்ள மாநிலங்களை பைக்கில் சுற்றிவிட்டு பூடான், நேபாள் ஆகிய நாடுகளிலும் சுற்றி முடித்துவிட்டு சென்னை வந்துவிட்டார். மேலும் “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் நவம்பர் மாதம் தனது “பரஸ்பர மரியாதை பயண”த்தை தொடங்கவுள்ளார். அதன் பின் ஒன்றரை வருடங்கள் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் உலகம் முழுவதும் பைக்கில் சுற்றவுள்ளார்.

இவ்வாறு அஜித்தின் பைக் சுற்றுலா குறித்துத்தான் அதிக அறிவிப்புகள் வெளிவருகிறதே தவிர, “விடாமுயற்சி” திரைப்படத்தை குறித்த தகவல்கள் வெளிவரவே இல்லை. ஆதலால் அஜித் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் இருக்கின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, “விடாமுயற்சி” குறித்து ஒரு அதிர்ச்சியான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். “விடாமுயற்சி படம் முடிவான நாளில் இருந்து இப்போது வரை பார்த்தோமானால் இரண்டு கட்டப் படப்பிடிப்பை முடித்திருக்கலாம். லியோக்கு இணையாக கொண்டு வந்திருக்கலாம். ஆனால் இவ்வளவு காலம் இழுத்து ஒரு டைட்டில் கொடுப்பதற்கு இவ்வளவு காலம் ஆகிவிட்டது.

சரி, டைட்டில் அறிவித்த பிறகாவது ஷூட்டிங் கிளம்புவார்கள் என்று பார்த்தால் அஜித் மோட்டோ ரைடு கம்பெனி தொடங்கிவிட்டார். நாம் கேள்விப்பட்ட வரையில் பார்த்தோமானால் ஜூன் 7 ஆம் தேதிக்குள் படப்பிடிப்பு தொடங்கிவிட்டால் சரி. அப்படி இல்லை என்றால் ஒன்று இந்த படம் டிராப் ஆகும், அப்படியும் இல்லை என்றால் லைகாவில் இருந்து புரொடக்சன் மாறும்” என ஒரு அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்