- Advertisement -
Homeபொழுதுபோக்குதோல்வி பயம் இந்த லெவலுக்கு உங்களை இறங்க வெச்சிடுச்சே? கலாய்க்கும் நெட்டிசன்கள் - ரோட்டோர டீக்கடையில்...

தோல்வி பயம் இந்த லெவலுக்கு உங்களை இறங்க வெச்சிடுச்சே? கலாய்க்கும் நெட்டிசன்கள் – ரோட்டோர டீக்கடையில் டீ குடித்த முதல்வர் விஜய்!

- Advertisement -

எங்க தலைவர் விஜய் கடைக்கண் அசைச்சா போதும், தொகுதியில் விஜய் முகத்தை ஒருமுறை காட்டினா போதும் மக்கள் எல்லாம் அப்படியே எங்க பக்கம் சாஞ்சிடுவாங்க ஓட்டுகளை வாரி குவிச்சிடுவாங்க என்று 4 மாதங்களாக தம்பட்டம் பேசி வந்த தவெக கட்சியினர் இப்போது இடைத்தேர்தலில் கதிகலங்கி போயுள்ளனர்.

அதிமுக கட்சியில் இருந்து விலகி வந்து தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏக்களை அவர்கள் ஏற்கனவே ஜெயித்த மதுராந்தகம் தாராபுரம் தொகுதிகளில் தவெக வேட்பாளர்களாக அறிவித்தது விஜய் செய்த இமாலய தவறு என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

ஏற்கனவே இந்த தொகுதிகளில் தவெக வேண்டாம் என்று மக்கள் முடிவு செய்துதான் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் சத்யபாமா ஆகியோரை ஓட்டுகள் போட்டு ஜெயிக்க வைத்தனர். ஆனால் அவர்கள் மக்களை ஏமாற்றிவிட்டு அதிமுக எம்எல்ஏவாக ஜெயித்த 15 நாட்களில் தவெக கட்சிக்கு தாவி விட்டனர்.

திமுக தீயசக்தி அதிமுக தூர்ந்து போன கட்சி தவெக மட்டுமே தூயசக்தி என்று வீரவசனம் பேசிய தவெக தலைவர் விஜய், முதல்வராக பதவியேற்க திமுக கூட்டணியில் போட்டியிட்டு ஜெயித்த காங்கிரஸ் விசிக இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் எம்எல்ஏக்களின் ஆதரவை நாடியது குறிப்பிடத்தக்கது. அதே போல் அதிமுக முன்னாள் அமைச்சர்களை எம்எல்ஏக்களை தவெகவில் சேர்த்துக்கொண்டு அவர்களுக்கு மாநில துணை செயலாளர்களை பதவிகளை சமீபத்தில் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்படி திமுக அதிமுக கட்சிகளை மோசமான கட்சிகள் என்று விமர்சித்து விட்டு திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவில் ஆட்சியமைத்தது மட்டுமின்றி அதிமுக முக்கிய நிர்வாகிகளை எல்லாம் தவெக கட்சியில் இணைத்துக் கொண்டு இருப்பது விஜய் நடத்தும் கபட நாடகம், மக்களை ஏமாற்றும் ஒரு செயல் என்பது தெளிவாகி விட்டது.

அதனால் தாராபுரம் தொகுதியில் வேட்பாளர் சத்யபாமாவை கதறி விட்டு நாடகம் நடத்தியது தவெக தலைமை. ஆனால் அது மக்களே கலாய்க்கும் ஒரு மேடை நாடகமாக மாறிவிட்டது. இன்று மதுராந்தகம் தொகுதியில் விஜய் ரோட்டோர கடையில் டீ குடித்து மக்களிடம் பேசி ஆதரவு கேட்டிருக்கிறார். ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களில் தனது இமேஜை இழந்த விஜய், இப்போது தோல்வி பயத்தில் டீ குடிக்கும் காட்சி எல்லாம் நடக்கிறது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்