- Advertisement -
Homeபொழுதுபோக்குகொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்ற தமிழக முதல்வர் விஜய் - அம்மனுக்கு அவர் செய்த...

கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்ற தமிழக முதல்வர் விஜய் – அம்மனுக்கு அவர் செய்த காணிக்கை என்னவென்று தெரியுமா? அசந்து போன பக்தர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கினார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் 233 தொகுதிகளில் போட்டியிட்டு 108 இடங்களில் அமோக வெற்றியை பெற்று, இப்போது தமிழக முதல்வராக பணிசெய்து வருகிறார்.

நடிகராக இருந்ததை விட அரசியல் கட்சி துவங்கிய பிறகு விஜய் அதிகமாக பக்தியில் நாட்டம் கொண்டு வருகிறார். திருச்சியில் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது அம்மன் கோவில் சர்ச் மற்றும் பள்ளிவாசல் என இந்து இஸ்லாம் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

- Advertisement -

தனது பெயர் ஜோசப் விஜய் என்று இருந்தாலும் எம்மதமும் எனக்கு சம்மதம்தான் என்று சொல்கிற வகையில் அவரது இந்த ஆன்மீக நாட்டம் இருந்தது. மேலும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும் விஜய் சென்று அங்கு நடந்த சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகளிலும் கலந்துக்கொண்டார்.

இந்நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த 11வது நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் கலந்துக்கொண்டார். அதன்பிறகு இன்று காலை அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக கர்நாடக மாநிலம் மங்களூருக்கு சென்றார். மங்களூருவில் இருந்து காரில் முதல்வர் விஜய் கொல்லம் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றார்.

- Advertisement -

கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் உள்ள பைந்தூர் தாலுகாவில் குந்தாபுரா அருகில் அமைந்துள்ள கொல்லூர் என்னுமிடத்தில் இந்த புகழ்பெற்ற மூகாம்பிகை கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சென்ற அவருக்கு கர்நாடகா அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து சிவப்பு சால்வை அணிந்தபடி கோவிலுக்குள் சென்ற முதல்வர் விஜய் மூகாம்பிகை அம்மனை வேண்டினார். அப்போது கோவிலுக்கு முதல்வர் விஜய் 1.6 கிலோ எடை கொண்ட வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கினார். கொல்லம் மூகாம்பிகை அம்மன் கோவில் மிகுந்த சக்தி வாய்ந்த தெய்வமாகும். முன்னாள் முதல்வர் எம்ஜிஆரும் இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்