- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக கட்சி அரியணையில் ஏற மூளையாக செயல்பட்டது யார்? வெளிச்சத்துக்கு வந்த உண்மை - ...

தவெக கட்சி அரியணையில் ஏற மூளையாக செயல்பட்டது யார்? வெளிச்சத்துக்கு வந்த உண்மை – முதல்வர் விஜயை நிழலாக பின்தொடரும் ஜெகதீஷின் பின்னணி!

- Advertisement -

தமிழக முதல்வர் விஜயின் தனி செயலாளராக தி ரூட் நிறுவனர் ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். எப்போதும் விஜயுடன் நிழல் போல வலம் வரும் ஜெகதீஷ் பழனிச்சாமிக்கு மிகப்பெரிய கௌரவத்தை விஜய் அளித்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் அடைந்த மிகப்பெரிய வெற்றிக்கு பின்னால் இருப்பது சோசியல் மீடியாவும் அதை தவெக கட்சி கையாண்ட அணுகுமுறையும்தான் முக்கிய காரணம்.

அதற்கு பின்னணியில் இருந்தவர்தான் ஜெகதீஷ் பழனிச்சாமி. சினிமா துறையில் 15 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் கொண்ட ஜெகதீஷ் பழனிசாமி கடந்த 2020ம் ஆண்டு தி ரூட் என்ற டேலண்ட் மேனேஜ்மென்ட் மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். சினிமா உலகில் நடிகர் விஜயின் நிழலாக வலம் வந்தார்.

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் லியோ படங்களில் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி கட்டிலில் அமர்ந்ததற்கும் விஜய் முதலமைச்சர் ஆனதற்கு பின்னால் ஜெகதீஷ் பழனிச்சாமியின் மிகப்பெரிய டிஜிட்டல் வியூகம் இருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தவெக கட்சியின் ஐடி விங்க் மற்றும் சோஷியல் மீடியா பக்கங்களை ஜெகதீஷின் தி ரூட் நிறுவனமே முழுமையாக கையாண்டது. தமிழகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான விஜய் ரசிகர்களின் தரவுகளை துல்லியமாக சேகரித்து சமூக வலைதளங்களின் அல்காரிதங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி டிஜிட்டல் ஊடகங்களில் ஒரு பெரும் அரசியல் அலையை உருவாக்கினர்.

- Advertisement -

இந்த நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப உத்தியானது சாதாரண வாக்காளர்களிடமும் விஜயை ஒரு மிக முக்கிய மாற்று அரசியல் தலைவராக கொண்டு போய் சேர்த்தது. இந்த வார் ரூம் உத்திதான் இன்று தவெக கட்சியை அரியணையில் ஏற்றி உள்ளது. சினிமா துறையில் ஒரு திறமையான மேலாளராகவும் தயாரிப்பாளராகவும் ஒத்துழைப்பு வைத்த ஜெகதீஷ் தேர்தல் காலத்தில் விஜயின் முதன்மை வியூக வகுப்பவராகவும் செயல்பட்டார்.

அவரது விசுவாசத்திற்கும் உழைப்பிற்கும் மதிப்பளிக்கும் வகையில் தற்போது முதல்வர் விஜய் தனது மிக முக்கிய பொறுப்பான தனிச் செயலாளர் பதவியை ஜெகதீஷூக்கு வழங்கி உள்ளார். ஒரு சாதாரண ரசிகனாக தொடங்கி இன்று தமிழக முதலமைச்சரின் வலதுகரமாக தனிச்செயலாளராக உயர்ந்துள்ள ஜெகதீஷின் வளர்ச்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 18 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரசிகராக தன்னை சந்தித்த ஜெகதீஷை இன்று தனது தனிச் செயலாளராக பதவி தந்து அழகு பார்க்கிறார் முதல்வர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்