- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 படத்தின் இயக்குனர் சிம்பு தேவனா? திடீரென வெளிவந்த பகீர் தகவல், என்னவா இருக்கும்?

இந்தியன் 2 படத்தின் இயக்குனர் சிம்பு தேவனா? திடீரென வெளிவந்த பகீர் தகவல், என்னவா இருக்கும்?

- Advertisement -

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் “இந்தியன் 2” திரைப்படம் மிகவும் மும்முரமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்திற்கான கிராபிக்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கமல்ஹாசனுடன் சித்தார்த், சமுத்திரக்கனி, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

“இந்தியன்” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து “இந்தியன் 2” திரைப்படம் குறித்த பேச்சுக்கள் அடிபட்டன. அதன் பின் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கியது.

- Advertisement -

ஆனால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியான நிலையில் படப்பிடிப்பு அப்படியே முடங்கியது. அதன் பின் கொரோனா ஊரடங்கும் வந்த நிலையில் இத்திரைப்படம் டிராப் என்றே கூறப்பட்டது.

ஆனால் கடந்த வருடம் மீண்டும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஏற்கனவே இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வர ரெட் ஜெயன்ட் நிறுவனமும் கைக்கோர்த்துக்கொண்டது. ஆதலால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சீராக நடைபெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் சித்தார்த்திற்கு அப்பாவாக சமுத்திரக்கனி நடித்துள்ளாராம். இவர்கள் இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிதம்பரம் அருகில் படமாக்கப்பட்டதாம். இந்த காட்சிகளை இயக்குனர் சிம்பு தேவன்தான் இயக்கினாராம்.

ஷங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து “கேம் சேஞ்சர்” திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். ஆதலால் இயக்குனர் ஷங்கருக்கு வசந்தபாலன், அறிவழகன் ஆகியோர் “இந்தியன் 2” படத்தில் இணை இயக்குனராக பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவருமே தொடக்கத்தில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் சிம்பு தேவனும் இத்திரைப்படத்தில் இணை இயக்குனராக பணியாற்றி வருவது தற்போது தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்