சில நடிகைகள் சொற்பமான படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்து விடுகின்றனர். சங்கமம் படத்தில் நடித்த நடிகை விந்தியா, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அப்படி பிடித்தமான நடிகைகளில் ஒருவர். தொடர்ந்து பல படங்களில் நடித்த விந்தியா, இப்போது அதிமுகவில் மகளிரணியில் இருந்து வருகிறார்.
நடிகை விந்தியா அரசியலில் இருப்பதால் பலரையும் கடுமையாக விமர்சித்து பேசக் கூடியவர். அதுவும் குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்களை பற்றி ஓரிரு வார்த்தைகளில் மிக கடுமையாகவும், அதே நேரத்தில் கிண்டலாகவும் விமர்சித்து ஆச்சரியப்படுத்துபவர். அதனால் அரசியல் பேச்சை கேட்க பலரும் ஆர்வம் காட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர்கள், நடிகைகள் குறித்து நடிகை விந்தியா வெளிப்படையாக பேசியிருக்கிறார். அப்போது விந்தியா கூறியதாவது, நடிகர் தனுஷ் நடிக்கு வந்த புதிதில் அவரை பலரும் உருவக்கேலி செய்தனர் ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி அதில் கொடிகட்டி பறக்கிறார். தனுஷ் மிகத் திறமையான ஒரு நடிகர்.
என் தம்பி நடிகர் சிம்பு, சகலகலா வல்லவன் டிஆர் என அழைக்கப்படும் டி ராஜேந்தர் மகன். ஆனால் அவரைச் சுற்றி எப்போதும் ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். அதை எதிர்த்து ஜெயிக்கும் ஒரு தைரியம் சிம்புவிடம் மட்டுமே உள்ளது.
இப்போது இருக்கும் சினிமாத் துறையில் நடனம் என்று சொன்னால் முதலில் நினைவுக்கு வருபவர் நடிகர் விஜய்தான். அவரைப்போல் நடனமாடும் ஒரு சிறந்த நடிகரை எங்கேயும் காண முடியாது. அதுபோல அஜீத்குமார் பற்றி சொல்ல வேண்டும் என்றால், மிகவும் இயல்பான குணம் கொண்ட ஒரு சிறந்த மனிதர்.
நடிகை நயன்தாரா பல வலிகளை தாண்டி தனக்கென ஒரு இடத்தை இந்த சினிமாவில் பிடித்து ஹீரோ நடிகர்களுக்கு சமமாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அதேபோன்று திரிஷாவும் 20 ஆண்டுகளாக இளமையாக நடமாடும் ஒரு சிறந்த நடிகையாக இருக்கிறார் என்று நடிகை விந்தியா, தனது கருத்துக்களை கூறியிருக்கிறார் அது தற்போது வைரலாகி வருகிறது.





