- Advertisement -
Homeபொழுதுபோக்குபாடகி தீ-யிடம் திடீரென மன்னிப்பு கேட்ட சின்மயி... ஓ... அதற்கு இதுதான் காரணமா...

பாடகி தீ-யிடம் திடீரென மன்னிப்பு கேட்ட சின்மயி… ஓ… அதற்கு இதுதான் காரணமா…

- Advertisement -

தமிழ் சினிமாவின் திரைப்பட பின்னணி பாடகிகளில் மிக மிக முக்கியமானவர் சின்மயி. தனது இனிமையான குரலால் காதுகளுக்கு தேனூட்டும் ஏராளமான பாடல்களை அவர் பாடி இருக்கிறார். இதில் பெரும்பாலான பாடல்கள் ஹிட் அடித்துள்ளன. உதாரணத்திற்கு சொல்லப் போனால் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த, ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை கூறலாம். இதனை அவர்தான் பாடியிருக்கிறார்.

ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான அந்தப் பாடல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான லிஸ்டில் ஒன்றாக அமைந்தது. அது சின்மயி பாடி இருக்கிறார் என தெரிந்ததும் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இங்கு உருவானது. வாகை சூடவா திரைப்படத்தில் இடம்பெற்ற சரசர சாரக்காத்து பாடலும் அவரது குரலில்தான் பாடப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார். எக்ஸ் வலைதளத்தில் மீ டூ ஹேஷ்டேக் உருவாக அதில் வைரமுத்து குறித்து சின்மயி பேசியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. சொல்லப்போனால் தமிழ் திரையுலகில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த விவகாரத்திற்குப் பிறகு சின்மயிக்கு பாடல் பாடும் வாய்ப்புகள் குறைந்து விட்டன. அவரது குரலைக் கேட்கவே முடியவில்லை என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்திருந்தனர். இப்படியான சூழலில் தக் லைப் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சின்மயி, முத்தமழை பாடலை பாடியிருந்தார். இது மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து விட்டது. படத்தில் அந்த பாடலை பின்னணி பாடகி தீ பாடியிருக்க, சின்மயி பாடினால் நன்றாக இருக்கும் என்று பலரும் கூறி வந்தனர்.

- Advertisement -

இந்த விவகாரம் குறித்து தற்போது சின்மயி பேசியுள்ளார். அதில், முதலில் நான் தீ-யிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னையும் அவரையும் ஒப்பிட்டு பேசுவது தேவையற்றது. தீ மிகவும் சின்ன பெண். இன்னும் 15 ஆண்டுகளில், அவர் 50 சின்மயி, 50 ஸ்ரேயா கோசல்களை முழுங்கிவிட்டு அவருக்கென ஒரு தனி இடத்தை உருவாக்குவார்.

தீயின் குரலில் இருக்கும் சில தனித்துவங்களை இங்கு யாராலும் செய்யவே முடியாது. சின்மயி வெர்ஷன் தீ வெர்ஷன் என்று கூறுவது ஏதோ சண்டையிடுவது போன்று உள்ளது. இது ஒன்றும் போட்டி இல்லை என்று பேசியுள்ளார். அவர் கூறியிருக்கும் வீடியோவை இணையத்தில் பலரும் பகிர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்