- Advertisement -
Homeபொழுதுபோக்குஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமான உருவாகும் வேள்பாரி வரலாற்று படம்… வேள்பாரியில் நடிக்க போகும் 2 ஹீரோக்கள்...

ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமான உருவாகும் வேள்பாரி வரலாற்று படம்… வேள்பாரியில் நடிக்க போகும் 2 ஹீரோக்கள் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று ரசிகர்களால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டாடப்பட்டவர் இயக்குனர் ஷங்கர். ஏனெனில் கடந்த 1990களிலேயே அவர் பிரமாண்ட பட்ஜெட்டில் பெரிய படங்களை எடுத்து ரசிகர்களை அசத்தியவர். ஹாலிவுட் படங்களை போல தனது படங்களில் காட்சிகளை தந்திருப்பார்.

ஆனால் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படமும் கேம் சேஞ்சர் படமும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. வழக்கமான ஊழல் கதையை அவர் எடுத்திருந்ததால் ரசிகர்கள் அந்த அளவுக்கு இந்த படங்களை ரசிக்கவில்லை. இப்போது இந்தியன் 3 படமும் வெளிவராமல் அப்படியே முடங்கிக் கிடக்கிறது. அந்த படம் குறித்து எந்த தகவலும் இல்லை.

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற வரலாற்று நாவலை படமாக இயக்க தயாராகி வருகிறது. சுமார் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாக உள்ளது. பாகுபலி போன்ற வரலாற்று மன்னர் கால கதைக்களத்தில் இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் உருவாக்க உள்ளார்.

இந்த படத்தை மும்பையை சேர்ந்த பென்மீடியா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. இந்த படம் 3 பாகங்களாக உருவாகும் என்று தெரிகிறது. இந்த படத்தில் நடிக்க நடிகர் நடிகைகள் தேர்வு ரகசியமாக நடந்து வருகிறது. இசையமைப்பாளர் ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட டெக்னிஷியன்கள் குறித்த தேர்வும் நடக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த படத்தில் 2 ஹீரோக்கள் நடிக்க உள்ளனர். தமிழ் நடிகர் சியான் விக்ரம் இந்தி நடிகர் ரன்வீர் சிங் இருவரும் இந்த படத்தில் நடிக்க கமிட் செய்யப்பட உள்ளனர். ஏற்கனவே அந்நியன் படத்தை இந்தியில் ரீ மேக் செய்ய இயக்குனர் ஷங்கா் திட்டமிட்டார். அப்போது அந்நியன் படத்தில் ஹீரோவாக ரன்வீர் சிங் தான் நடிக்க இருந்தார்.

அந்த படத்தை மும்பையை சேர்ந்த பென் மீடியா நிறுவனம்தான் தயாரிக்கவும் இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்நியன் படம் இந்தியில் உருவாகாமல் டிராப் ஆனது. அதனால் வேள்பாரி படத்தில் இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிப்பது உறுதியாகி விட்டது. தமிழ் இந்தி என இரண்டு மாஸ் ஹீரோக்களை வேள்பாரி படத்தில் களம் இறக்க இயக்குனர் ஷங்கர் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்