- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் படத்தில் தமன்னா குத்தாட்டம் போட்ட காவலய்யா பாட்டு; இப்படி ஒரு சாதனையை செய்து விட்டதா?...

ஜெயிலர் படத்தில் தமன்னா குத்தாட்டம் போட்ட காவலய்யா பாட்டு; இப்படி ஒரு சாதனையை செய்து விட்டதா? தலைவரே… நீங்க இருந்தாலே அது தரமான சம்பவம்தான்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில், முதல் நாளில் 60 கோடி ரூபாய், இரண்டாம் நாளில் 37 கோடி ரூபாய், மூன்றாம் நாளில் 50 கோடி ரூபாய் என்று ரூ. 150 கோடி என்ற அளவில் தொடர்ந்து படம் வசூலை குவித்து வருகிறது.

எனினும் ஜெயிலர் அளவுக்கு வேட்டையன் படத்தின் வசூல் இல்லை என்பது தான் தியேட்டர் உரிமையாளர்களின் கவலையாக உள்ளது. எனினும் வரும் நாட்களில் வேட்டையன் படத்துக்கு இன்னும் வசூல் அதிகரிக்குமா அல்லது குறைந்து போகுமா என்பது தெரியவரும்.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்தை பொறுத்தவரை இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் ஆபீஸராக ரஜினியின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த படத்தில் வில்லனாக ராணா டகுபதி, நாயகியாக மஞ்சு வாரியார், கிஷோர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், பகத் பாசில், ரோகிணி, அபிராமி, தர்ஷன் உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும் என்கவுண்டர் சரியா தவறா என்ற கோணத்திலும், கல்வி வியாபாரம் செய்யப்படுவது குறித்தும் இந்த படம் இரண்டு முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறது. அதனால் ஒரு தரப்பினர் சமூகத்துக்கு இது போன்ற விழிப்புணர்வு படங்கள் அவசியம் என்று கூறுகின்றனர்.

- Advertisement -

அதே நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த இந்த படத்தில் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில், படத்தின் கதை, கதையின் போக்கு, காட்சிகளும் இல்லை என்பது ஒருதரப்பு கருத்தாக இருந்து வருகிறது. எனினும் இதற்கு முன்பு கடந்தாண்டில் ஆகஸ்ட் மாதம் வெளிவந்த ஜெயிலர் படம் பெரிய சாதனையை படைத்து இருக்கிறது. ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார். இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராப், கேமியோ ரோலில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மனம் கவர்ந்தன. அதிலும் குறிப்பாக காவலய்யா என்ற பாடலில் தமன்னாவின் குத்தாட்ட நடனம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்த பாட்டு இன்னும் ரசிகர்கள் மத்தியில் டிரண்டிங்காக இருந்து வருகிறது. யூடியூப்பில் இதுவரை 25 மில்லியன் அதாவது 25 கோடி பேர் பார்வைகளை கடந்துள்ளது. இப்பாடல் வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேலாகியும் தொடர்ந்து ட்ரெண்டில் இருந்து வருகிறது. 25 கோடி பேர் பார்வையாளர்களை கடந்துள்ள காவலய்யா பாடல் குறித்து, சன் பிக்சர்ஸ் நிறுவனம் வீடியோ வெளியிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்