சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பல படங்களில் மிகவும் முக்கியமான ஒரு படமாக அவருக்கு இருந்தது சந்திரமுகி படம். இந்த படம் கடந்த 2015ம் ஆண்டில் தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இயக்குனர் பி வாசு இயக்கத்தில் உருவான இந்த படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.
மலையாளத்தில் வெளியான மணிச்சித்ரதாழ் படத்தின் தமிழ் வெர்சன்தான் சந்திரமுகி. மலையாளத்தில் மோகன்லால் நடித்த கேரக்டரில் ரஜினியும் சுரேஷ் கோபி நடித்த கேரக்டரில் பிரபுவும், ஷோபனா கேரக்டரில் ஜோதிகாவும் தமிழில் நடித்திருந்தனர். இதில் ரஜினிக்காக சற்று கூடுதலான காட்சிகளை செய்து ரசிகர்களுக்காக சில மாற்றங்களை பி வாசு செய்திருந்தார்.
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் செம்மீன் ஷீலா நாசர் வடிவேலு சொர்ணா மாளவிகா விஜயகுமார் வினீத் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். கேஆர் விஜயாவும் சில காட்சிகளில் நடித்திருந்தார். இந்தபடம் 2005ம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த படம், 20 ஆண்டுகளுக்கு முன்பே 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த மாஸ் ஹிட் படமாக இருந்தது.
சந்திரமுகி படத்தில் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆகின. இதில் நடிகை ஜோதிகா நடிப்பு மிரட்டலாக இருந்தது. இந்த படத்தை பொருத்த வரை ஹீரோ ரஜினியாக இருந்தாலும் படத்தில் ரசிகர்களிடம் அதிகளவில் பேசப்பட்டவர் ஜோதிகா தான். ராரா பாடல் காட்சியில் மொத்த ரசிகர்களின் மனங்களையும் கவர்ந்து விட்டார்.
கடந்தாண்டில் பி வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி 2 படம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கங்கனா ரெனாவத் லட்சுமி மேனன் சிருஷ்டி டாங்கே வடிவேலு ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆனால் சந்திரமுகி போல இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.
இதற்கிடையே சந்திரமுகி படம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. முதலில் சந்திரமுகி படத்தை தெலுங்கில் எடுப்பதாக தான் திட்டமிடப்பட்டுள்ளது. இயக்குனர் பி வாசு தெலுங்கில்தான் இந்த படத்தை டைரக்ட் செய்ய விரும்பியிருக்கிறார். மெகா ஸ்டார் சிரஞ்சீவியை அணுகி ரஜினி கேரக்டரில் நடிக்க கேட்டுள்ளார். ஆனால் அவர் அந்த கதையில் நடிக்க மறுத்துவிட்டார். அதன்பிறகுதான் தமிழில் நடிகர் ரஜினி ஹீரோவாக நடிக்க சந்திரமுகி படத்தை பி வாசு இயக்கியதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.





