- Advertisement -
Homeபொழுதுபோக்குலால் சலாம் படம் குறித்த முக்கிய விஷயத்தை போட்டுடைத்த சினிமா பிரபலம் - தலைவர் படத்துக்கே...

லால் சலாம் படம் குறித்த முக்கிய விஷயத்தை போட்டுடைத்த சினிமா பிரபலம் – தலைவர் படத்துக்கே இப்படி ஒரு நிலமையா?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இதன்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171 படத்தில் நடிக்கிறார். அதன்பிறகு நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த், அதைத் தொடர்ந்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார், அண்ணாத்த படங்கள் போதிய வெற்றியை பெறவில்லை. அதன்பிறகு நல்ல படத்தின் கதைக்காக ரஜினி காத்திருந்த நிலையில், கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என்ற 2 வெற்றிப்படங்களை நெல்சன் தந்தார். இதையடுத்து தனது படத்தை இயக்கும் வாய்ப்பை நெல்சனுக்கு ரஜினிகாந்த் தந்தார்.

- Advertisement -

இதற்கிடையே இப்போது ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், லைகா புரடக்சன் தயாரிப்பில் வெளிவந்த லால் சலாம் படத்தில், ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில், படம் பிளாப் ஆனது. எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை.

ரஜினிகாந்த் ராமர் கோவிலுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்றது, லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் எங்க அப்பா சங்கி இல்லை என, ஐஸ்வர்யா பேசியது, அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், சங்கி என்ற விஷயத்தில் என் மகள் தப்பாக பேசவில்லை, சங்கி கெட்ட வார்த்தை இல்லை என்றும் விளக்கமளித்தார். இது அனைத்துமே சமூக வலைதளங்களில் வைரலானது.

- Advertisement -

இதுகுறித்து பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் கூறுகையில், லால் சலாம் படம் குறித்து ப்ளு சட்டை மாறன் விமர்சித்தது போல அவ்வளவு மோசமான படமாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் படத்துக்கு நெகட்டிவ் ஆன விமர்சனங்களே அதிகமாக வந்துள்ளன. லால் சலாம் படத்தை நான் பார்க்கவில்லை.

ஆனாலும் அது வெற்றிப்படம் இல்லை. லால் சலாம் ரிலீஸ் ஆன முதல் நாளில், ஒரு ஷோ கூட ஹவுஸ்புல் ஆகவில்லை என்ற சாதனையை லால் சலாம் படைத்துள்ளது என்றும் உண்மையை போட்டுடைத்து இருக்கிறார் நடிகர் சித்ரா லட்சுமணன். தலைவர் படத்துக்கே இந்த நிலமையா, என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்