துருவங்கள் 16 என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் நிறங்கள் மூன்று. இந்த படத்தில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
நிறங்கள் மூன்று படம் கடந்த நவம்பர் 22ம் தேதி வெளியான நிலையில், திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக சரத்குமாரும், பள்ளி ஆசிரியராக ரகுமானும், நடித்திருந்தனர்.
சினிமா திரைக்கதை எழுதும் கதாசிரியராக அதர்வா நடித்திருந்தார். தற்போது நிறங்கள் மூன்று படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படம் வருகிற 20ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி, ஆஹா ஓடிடி மற்றும் சிம்பிலி சவுத் ஓடிடி ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக, இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஆர்ஜே. பாலாஜி. இப்போது அவர் சூர்யா நடிக்கும் 45வது படத்தை டைரக்ட் செய்து வருகிறார். கோவையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 3 வாரங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆர்ஜே பாலாஜி இயக்கும் இந்த படத்தில் நடிகர் சூர்யா வக்கீல் கேரக்டரில் நடிக்கிறார். திரிஷா, லப்பர் பந்து நடிகை சுவாசிகா, நெடுஞ்சாலை பட நடிகை ஷிவதா மற்றும் நடிகர்கள் நட்டி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
இதற்கிடையே ஆர்ஜே பாலாஜி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சொர்க்கவாசல். இந்த படத்தை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனர் சித்தாத் விஸ்வநாத் இயக்கியிருந்தார். ஜெயிலில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி இந்த படத்தின் கதை உருவாகியிருந்தது.
இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி நாயகனாகவும், கருணாஸ் செல்வராகவன் பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். கடந்த நவம்பர் மாதம் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதே கவனம் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகி உள்ளது. சொர்க்கவாசல் படம் வருகிற டிசம்பர் 27ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.





