- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்பாஸூக்கு ஜோடியாக நடிக்க வைக்கிறேன்னு சொல்லி என்னை ஏமாத்திட்டீங்க, 9 லட்சம் ரூபாய் போச்சு -...

அப்பாஸூக்கு ஜோடியாக நடிக்க வைக்கிறேன்னு சொல்லி என்னை ஏமாத்திட்டீங்க, 9 லட்சம் ரூபாய் போச்சு – பிரபல காமெடி நடிகை கண்ணீர்!

- Advertisement -

ஆரம்பத்தில் சில டிவி சீரியல்கள் மற்றும் காமெடி ஷோக்களில் காணப்பட்டவர் நடிகை தீபா. பிறகு திரைப்படங்களில் வாய்ப்பு வந்ததால் சின்ன சின்ன காமெடி ரோல்களில் நடிக்கவும் ஆரம்பித்தார். டாக்டர் கடைக்குட்டி சிங்கம் தலைவன் தலைவி உள்ளிட்ட பல படங்களில் நடிகை தீபா நடித்திருக்கிறார்.

மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு நடிகையாக தீபா இருப்பதால் அவருக்கு பட வாய்ப்புகள் வருகின்றன. குறிப்பாக டாக்டர் தலைவன் தலைவி போன்ற படங்களில் தீபாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. டிவி நிகழ்ச்சிகள் சினிமா வாய்ப்பு என இரண்டிலும் தொடர்ந்து தீபா கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய காமெடி நடிகை தீபா கூறியதாவது, நான் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் இருக்கும்போது ஒரு சிலரிடம் நடிக்க வேண்டும் என்று கேட்டு ஏமாந்திருக்கிறேன். அப்போது ஒருத்தன் என்னிடம் நீங்க அப்பாஸூக்கு ஜோடியாக நடிக்கணும் என்று சொன்னான்.

அவன் சொன்னதை உண்மை என்று நான் நம்பினேன். அதனால் 9 லட்சம் ரூபாய் வேண்டும் என்று சொல்லி என்னை ஏமாற்றி விட்டான். இது போல் யாரும் ஏமாறக்கூடாது என்பதற்காக தான் என்னால் முடிந்த உதவிகளை நான் செய்து வருகிறேன். அதுபோல ஒரு முறை எனக்கு ஒரு சில உதவிகளை செய்த நபர் ஒருவர் என்னிடம் ஒரு விளம்பரத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார்.

- Advertisement -

நானும் சரி, அவர் நமக்காக எத்தனையோ உதவிகள் செஞ்சு இருக்கிறாரே? அவருக்கு எப்படி நாம மறுப்பு சொல்ல முடியும் என்று சரி என்று சம்மதம் சொல்லிவிட்டேன். பிறகு அங்கு போனபோது, நடிக்க வேண்டும் என்றால் பணம் வேண்டும் என்று ஒரு விளம்பரம் இருக்கிறது.

அந்த விளம்பரத்தில் என்னை நடிக்கச் சொல்லி இருந்தார்கள். எனக்கு ரொம்பவே கஷ்டமாகி விட்டது. அதற்கு பிறகுதான் இந்த மாதிரி மோசடி செய்து ஏமாற்றும் விஷயங்களில் எல்லாம் நான் கலந்து கொள்ள கூடாது என்று முடிவெடுத்தேன். அப்போது கூட அங்கு வாய்ப்புக்காக வந்தவர்களிடம், இப்படி எல்லாம் ஏமாறாதீங்க என்று நான் அட்வைஸ் கொடுத்தேன் என்று நடிகை தீபா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்