தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. 1990 களில் தொடங்கி இப்போது வரை அவரது காமெடி, ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல, இளையராஜாவும் வடிவேலுவும் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷங்கள் என்று ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை இப்போதும் பார்க்கலாம்.
குறிப்பாக வடிவேலு நகைச்சுவையில் இப்போது வரை கோலோச்சி இருக்கிறார். இணையதளத்தைத் திறந்து எங்கு சென்றாலும் அங்கு வடிவேலுவை நாம் பார்க்கலாம். அதேபோல், எந்த ஒரு மீம் கன்டென்ட் ஆக இருந்தாலும் அங்கு வைகை புயல் வந்து விடுவார். அந்த அளவுக்கு அவர், தமிழ் சினிமா ரசிகர்களின் உள்ளங்களில் வாழ்ந்து வருகிறார்.
வடிவேலுவை ரசிகர்கள் இந்த அளவு கொண்டாடும் அளவிற்கு, அவரது தனிப்பட்ட வாழ்க்கையை கொண்டாடப்படவில்லை. குறிப்பாக எப்போதும் கடும் விமர்சனங்களுக்கு அவர் ஆளாகி வந்தார். 2011 ஆம் ஆண்டு சமயத்தில் விஜயகாந்திற்கு எதிராக வீதி வீதியாக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அப்போது அவரை தரக்குறைவாக அவர் தாக்கி பேசினார்.
ஆனால் விஜயகாந்த் இதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. அந்த தேர்தலில் சொல்லி அடித்தது போல வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தார் விஜயகாந்த். அதன் பிறகு வடிவேலுவை திரைத்துறையில் பார்க்க முடியவே இல்லை. அப்போது ஏதாவது ஒரு படங்களில் அவர் தலை காட்ட, அதிலும் அவரது காமெடி எடுபடவில்லை. இம்சை அரசன் 23ஆம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் கூட, இயக்குனர் சிம்பு தேவனிடம் சண்டையிட்டு படத்தை பாதியில் நிறுத்த செய்தார் வடிவேலு.
அண்மையில் விஜயகாந்த் மறைந்த போது கூட, அதற்கான இறுதி அஞ்சலியில் வடிவேலு பங்கேற்கவில்லை. இது குறித்து இணையதளத்தில் பலரும் கேள்வி எழுப்பினர். வடிவேலு எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து நடந்து கொள்வாரா என்ற பேச்சுகளும் எழுந்தன. இப்படியான சூழலில் அவர் குறித்து பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ் ஆகியோர் பேசி இருப்பது இணையத்தில் வைரலாக வருகிறது.
இது குறித்து அவர்கள் கூறியதாவது, வடிவேலு சார் உடன் நாங்கள் நடிக்கும் போது நாங்கள் சிறப்பாக நடித்து விட்டால், அந்தக் காட்சி படத்தில் இருக்காது. அதனை தூக்கச் சொல்லிவிடுவார் வடிவேலு என்று ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதேபோல் அவரை பற்றி பேசி இருக்கும் கணேஷ், ஒருமுறை நான் படத்தில் நடிக்கும் போது இயக்குனரிடம் பேசி என்னை அதிலிருந்து வெளியேற்றி விட்டார். இதைப் பற்றி நான் அவரிடம் கேட்டபோது, செல்லம் உனக்கு இதைவிட நல்ல படம் காத்திருக்கு என்று கூறி விடுவார் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து பலரும் வடிவேலுவை வசைப்பாடி வருகின்றனர்.





