தமிழ் சினிமாவில் 100 கோடி ரூபாய் வசூல் படங்கள் என்பதே பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 2025ம் ஆண்டில் கிட்டத்தட்ட 300 தமிழ் படங்கள் வெளியான நிலையில் இதில் 100 கோடி ரூபாய் வசூலித்த படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அதிலும் உச்ச நட்சத்திர நடிகர்கள் நடித்த படங்களாக தான் அவை இருக்கின்றன.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு படம் 100 கோடி ரூபாய்க்கு வசூலித்தால் அது சாதனை. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தால் அது சாதனையா என்றும் ரசிகர்கள் கலாய்க்கின்றனர். அந்தளவுக்கு தமிழ் சினிமாவின் தரமும் வசூல் நிலவரமும் அதல பாதாளத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது.
சமீபகாலமாக இந்தி தெலுங்கு கன்னடத்தில் உருவாகும் பான் இந்தியா படங்கள் கூட 1000 கோடி ரூபாய் வசூலை எளிதாக கடந்து சாதனை படைக்கிறது. ஆனால் தமிழில் உருவாகும் படங்கள் ரூ. 100 கோடி வசூலை கடப்பதற்கே திண்டாடி விடுகிறது. கமல் விஜய் அஜீத் ரஜினி தனுஷ் விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் என குறிப்பிட்ட நட்சத்திர நடிகர்களின் படங்கள் மட்டுமே இதில் 100 கோடி வசூல் படங்களாக இருக்கின்றன.
இந்நிலையில் ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் 3 படம் 3 நாட்களில் வசூலில் பெரிய சாதனை படைத்துள்ளது. அவதார் முதல் பாகம் படம் கடந்த 2009ம் ஆண்டில் டிசம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் மிகப்பெரிய வசூலையும் குவித்தது. மேலும் 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது.
தொடர்ந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவதார் படத்தின் 2ம் பாகம் 2021ம் ஆண்டில் வெளியானது. அவதார் தி வே ஆஃப் வாட்டர் என்ற டைட்டிலில் வெளியான இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை ரசிகர்களிடம் பெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது. இப்போது அவதார் படத்தின் 3ம் பாகம் அவதார் பஃயர் அண்ட் ஆஷ் என்ற டைட்டிலில் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் சிகோனி பீவர் ஸ்டீபன் லாங்கெட் வின்லெட் பிரிட்டிஷ் பிரிட்டன் டால்டன் எடி பால்கோ மற்றும் திலீப் ராவ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த படம் கடந்த 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்நிலையில் அவதார் பஃயர் அண்ட் ஆஷ் படம் 3 நாட்களில் உலக அளவில் மொத்தம் 3090 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. இப்படி ஒரு வசூலா, என்னப்பா இது என தமிழ் சினிமா ரசிகர்கள் வாயடைந்து போயுள்ளனர்.





