- Advertisement -
Homeபொழுதுபோக்குசித்தா பட இயக்குனர் அருண்குமாருக்கு கமல் போட்ட கண்டிஷன்கள் - இந்த படத்தின் கதைக்களம் மீண்டும்...

சித்தா பட இயக்குனர் அருண்குமாருக்கு கமல் போட்ட கண்டிஷன்கள் – இந்த படத்தின் கதைக்களம் மீண்டும் அந்த ஊரா? கெட்டப்பை மாற்றிய ஆண்டவர்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் இப்போது 2 படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். அதில் ஒரு படத்தை ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் டைரக்ட் செய்கின்றனர். மற்றொரு படத்தை பண்ணையாரும் பத்மினியும் சித்தா வீரதீர சூரன் 2 போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் டைரக்ட் செய்கிறார்.

கமல் இப்போது அருண்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் முதலில் நடிக்கிறார். அதன்பிறகுதான் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதனால் அருண்குமார் இயக்கும் படத்துக்கான போட்டோஷூட்டில் நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் பங்கேற்றார். அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

- Advertisement -

இந்த படத்தை பற்றிய பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த படத்தில் கமல்ஹாசன், குறைந்த அளவில் தலையில் முடி வைத்துக்கொண்ட கெட்டப்பில் நடிக்கிறார். அதாவது குருதிப்புனல் படத்தில் இருந்த ஹேர் ஸ்டைலில் அவர் இருக்க போகிறார்.

மேலும் படத்தின் தனது இயல்பான தோற்றத்தை மட்டுமே காட்ட வேண்டும். டி ஏஜிங் தொழில்நுட்பத்தில் இளமையாக அழகாக காட்டும் முயற்சிகள் இருக்க கூடாது என்றும் கூறியிருக்கிறார். அத்துடன் தனக்கு படத்தில் நடனக் காட்சிகள் எதுவும் வேண்டாம் என்றும் கட் அண்ட் ரைட்டாக கண்டிஷன் போட்டிருக்கிறார்.

- Advertisement -

ஏனெனில் தக்லைஃப் படத்தில் கமல் நடனமாடிய காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் ஏற்படுத்தியதால் இந்த படத்தில் டான்ஸ் இருக்க கூடாது என்று கமல் கூறியிருக்கிறார். அத்துடன் இந்த படத்தில் இளம் வயது கதாநாயகி கூடாது. தனக்கு தோதான மத்திய வயது கதாநாயகி அதாவது 40 வயதுக்கு மேற்பட்ட நடிகை இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இந்த படம் முழுக்க முழுக்க மதுரை கதைக்களத்தில் உருவாக உள்ளது. விருமாண்டி படத்துக்கு பிறகு பல ஆண்டுகள் கழிந்த நிலையில் நடிகர் கமல் மதுரை நகரில் நடக்கும் ஒரு கதைக்களம் கொண்ட படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தம் இந்த படம் ஆக்சன் களத்தில் மதுரையை பின்னணியை கொண்டு உருவாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்