- Advertisement -
Homeபொழுதுபோக்குஇட்லி கடை படம் குறித்த எந்த அப்டேட்டும் இல்லே, அந்த விஷயத்தால் அப்செட் ஆனாரா...

இட்லி கடை படம் குறித்த எந்த அப்டேட்டும் இல்லே, அந்த விஷயத்தால் அப்செட் ஆனாரா நடிகர் தனுஷ்? – ரசிகர்கள் கேள்வி!

- Advertisement -

தனது அண்ணன் இயக்குனர் செல்வராகவன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். ஆரம்பத்தில் ஒல்லிப்பிச்சான் நடிகர் என்று உருவக்கேலி செய்யப்பட்ட அவர் பிறகு பல வெற்றிப் படங்களை கொடுத்து தனது திறமையை நிரூபித்தார். நடிகர் பாடகர் தயாரிப்பாளர் அதையடுத்து இயக்குனர் அவதாரமும் எடுத்து ஜெயித்துக் காட்டினார்.

ராஜ் கிரண், ரேவதி நடித்த ப பாண்டி படத்தை இயக்கிய நடிகர் தனுஷ், அடுத்து பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தனது 50வது படம் ராயன் படத்தை அவரே இயக்கி நாயகனாகவும் நடித்தார். கடந்தாண்டில் வெளியான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. ஏஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.

தனது அண்ணன் செல்வராகவன் தன்னை அறிமுகப்படுத்திய போல, தனது சகோதரி மகன் பவிஷ் என்பவரை நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார் நடிகர் தனுஷ். இந்த படம் சுருக்கமாக நீக் என அழைக்கப்பட்டது. தனுஷ் இயக்கத்தில் உருவான 3வது படமான நீக் படத்தில் பவிஷ் நாயகனாகவும் அஜீத்குமாரின் ரீல் மகள் அனிகா சுரேந்திரன் நாயகியாகவும் நடித்தனர்.

கடந்தாண்டில் வெளியான ராயன் படம் போலவே நீக் படமும் பெரிய வரவேற்பை வெற்றியை பெறும் என்று எதிர்பார்த்த இயக்குனர் தனுஷூக்கு இந்த படம் பெரிய ஏமாற்றத்தை தந்தது. ரூ. 13 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 8 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து நஷ்டத்தை ஏற்படுத்தியது. கடந்த 21ம் தேதி வெளியான இந்த படம் ஒரு வாரம் கூட தியேட்டர்களில் ஓடவில்லை.

இந்நிலையில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லிகடை படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு விட்டது. அதே நாளில் நடிகர் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படமும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் படம் குறித்த பிரமோசனில் தீவிரம் காட்டி வருகிறது. ஓஜி சம்பவம் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து குட் பேட் அக்லி படம் குறித்த பிரமோசனில் படக்குழு அதிக ஆர்வம் காட்டி வருகிறது. படத்தின் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமாரும் அப்டேட் கொடுத்து வருகிறார். ஆனால் இட்லி கடை குறித்த எந்த லேட்டஸ்ட் அப்டேட்டும் இல்லாமல் தனுஷ் ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர். நீக் படம் தோல்வியால் தனுஷ் பயங்கர அப்செட் ஆகி விட்டாரா, குறித்த தேதியில் இட்லி கடை படம் ரிலீஸ் ஆகுமா, இல்லே தள்ளிப் போகுமா எந்த தகவலும் இல்லையே என புலம்புகின்றனர்.

சற்று முன்