நடிகர் விஜய் நடிப்பில், வெங்கட்பிரபு டைரக்சனில் உருவாகி வரும் படம் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 23ம் தேதி வரை, சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கோவளம் பகுதிகளில் நடக்கிறது. தொடர்ந்து ஒரு வாரம் பிரேக்கப் விடப்படுகிறது.
பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ராஜஸ்தான் செல்லும் படக்குழு, அங்கு பல நாட்கள் தங்கி, படத்தின் முக்கிய காட்சிகளை படம்பிடிக்க உள்ளது. அதற்கு பின், இலங்கை செல்லும் படக்குழு அங்கும் படப்பிடிப்பை சில வாரங்கள் தங்க முடிக்கிறது.
அதற்கு பின் இறுதிகட்டமாக இஸ்தான்புல் செல்கிறது. அங்குதான் படத்தின் கிளைமேக்ஸ் உள்ளிட்ட காட்சிகளை எடுத்து, படத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளது. மார்ச் மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முழுமையாக முடிப்பதுதான் படக்குழுவின் திட்டம். இதில் அதிகபட்சம் ஒருவாரம் பத்து நாட்கள் வரை கூடுதல் நாட்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வசீகரா படத்துக்கு பிறகு இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக சிநேகா நடிக்கிறார். அதாவது அப்பா, மகன் இரண்டு கேரக்டரில் விஜய் நடிப்பதால் அதில் அப்பா கேரக்டரில் நடிக்கும் விஜய்க்கு சிநேகாதான் ஜோடி. அதாவது மகன் விஜய்க்கு அம்மா கேரக்டரில் சிநேகா இதில் நடித்திருக்கிறார். மேலும், மைக் மோகன் இதில் நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த படத்தை பொருத்தவரை அப்பா, மகன் இரண்டு கேரக்டர்களில் விஜய் நடித்தாலும், மகனாக வருபவர் மிக இளமையாக தெரிய வேண்டும் என்பதற்காக டீஏஜிங் செய்யப்பட்டு, விஜய் கல்லூரி மாணவர் போல மிக இளமையாக காட்சி தருகிறார். சமீபத்தில் வந்த அவரது புகைப்படங்கள், வீடியோக்கள் அதை உறுதிபடுத்துகின்றன.
இந்நிலையில் படத்தில் நடித்திருக்கும் பிரசாந்த், பிரபுதேவா போன்றவர்கள் என்ன கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள் என்ற தகவலும் இப்போது வெளிவந்துள்ளது. அதாவது, அப்பா கேரக்டரில் நடிக்கும் விஜய்க்கு பிரசாந்த், பிரபு தேவா ஆகிய இருவரும் உயிர் நண்பர்களாக நடித்துள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது.





