கடந்த 2023ம் ஆண்டில் வெளியான படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் கேரக்டரில் நடித்திருந்தார். ஆரம்பத்தில் வீட்டில் ஓய்வில் இருப்பவராகவும் பிறகு பிளாஷ்பேக் காட்சிகளில் ஜெயிலில் வார்டனாகவும் வந்து நடிப்பில் அதகளம் செய்திருந்தார்.
படையப்பா படத்துக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன் ரஜினிக்கு மனைவியாக நடித்திருந்தார். வசந்த் ரவி மிர்ணா மேனன் யோகிபாபு டிவிடி கணேஷ் சுனில் ரெடின் கிங்ஸ்லி சரவணன் அறந்தாங்கி நிஷா மற்றும் கெஸ்ட் ரோலில் ஜாக்கி ஷெராப் மோகன்லால் சிவராஜ்குமார் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். தமன்னா ஒரு சிறப்பு பாடல் காட்சியிலும் தோன்றியிருந்தார்.
ஜெயிலர் படம் வெளியாகி 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளிய நிலையில் ஜெயிலர் 2 படத்தை தயாரிக்க அப்போதே சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்தது. ரஜினியிடம் அதற்கு ஓகே சொன்னார். லால் சலாம் வேட்டையன் கூலி படங்களுக்கு பிறகு ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினி கலந்துக்கொண்டார். டிசம்பர் மாத இறுதியுடன் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெளியான ஜெயிலர் படத்தில் வில்லனாக வந்த மலையாள நடிகர் விநாயகன் நடிப்பில் அதகளம் செய்து மிரட்டியிருந்தார். அவரது நடிப்பு படத்தின் வெற்றிக்கு பெரிய அளவில் சப்போர்ட் செய்தது. ஆனால் அந்த படத்தின் கிளைமாக்ஸில் அவர் கொலை செய்யப்பட்டு விடுகிறார். அதனால் ஜெயிலர் 2 படத்தில் மீண்டும் அவர் வாய்ப்பு இல்லை.
இப்போது ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது. இந்த மாதம் இறுதியுடன் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. இந்த படத்தில் முதலில் வில்லன் கேரக்டரில் நடிப்பவர் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஜெயிலர் 2 படத்தில் விஜய் சேதுபதிதான் வில்லன் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உண்மையில் ஜெயிலர் 2 படத்தின் வில்லன் யார் என்பதில் ரஜினி ரசிகர்களுக்கு குழப்பம் நீடிக்கிறது.
ஏற்கனவே விஜய் ரஜினி கமல் மற்றும் ஷாருக்கான் போன்றவர்களுக்கு வில்லனாக நடித்தவர் விஜய் சேதுபதி. ரஜினியுடன் பேட்ட படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். ஆனால் அதில் மெயின் வில்லன் நவாசுதீன் சித்திக் தான். நேரடி வில்லனாக விஜய் சேதுபதி அதில் இருக்க மாட்டார். மேலும் தெலுங்கு படம் ஒன்றிலும் விஜய் சேதுபதி வில்லனாக இப்போது நடித்து வருகிறார். அதனால் ஜெயிலர் 2 படத்தில் அவர் மெயின் வில்லனாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.





