- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அஜீத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி - நண்பருக்கு வாழ்த்து சொல்ல...

நடிகர் அஜீத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி – நண்பருக்கு வாழ்த்து சொல்ல மறந்த தவெக தலைவர் நடிகர் விஜய்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிறார். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். ஏராளமான ரசிகர்கள் கூட்டம் அஜீத்குமாருக்கு இருக்கிறது. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம் மாபெரும் வரவேற்பை பெற்று ரூ. 250 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்திருக்கிறது.

இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக துபாய் இத்தாலி பிரிட்டன் என வெளிநாடுகளில் நடந்து வரும் கார் பந்தயங்களில் நடிகர் அஜீத்குமார் கலந்து வருகிறார். அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற அணியின் தலைவராகவும் இருக்கிறார். அடிக்கடி அவரும் அவரது குழுவும் கார் ரேஸில் வெற்றிகளை பெற்று வருகிறது.

- Advertisement -

வருகிற அக்டோபர் மாதம் வரை கார் ரேஸ் உள்ள நிலையில், 3 தினங்களுக்கு முன் புதுடில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் நடிகர் அஜீத்குமாருக்கு பத்மபூஷன் விருதை இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். விருது பெற்ற நடிகர் அஜீத்குமாருக்கு பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். இன்று மே 1ம் தேதி அவரது பிறந்த நாள் என்ற நிலையில் பிறந்த வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் அஜீத்குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறியிருக்கிறார். அவர் கூறியதாவது, தனித்தன்மை மிக்க நடிப்பாற்றலால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தன்னகத்தே கொண்டுள்ள திரை ஆளுமையாக இருந்து வருகிறார்.

- Advertisement -

கார் பந்தயம், துப்பாக்கி சுடுதல், ட்ரோன் வடிவமைப்பு என பல துறைகளில் தனது திறமைகளை தொடர்ந்து வெளிக்காட்டி பல சாதனைகளையும் புரிந்து வரும் அன்புச் சகோதரர் பத்மபூஷன் அஜீத் குமார் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பல்துறை வித்தகராக அவர் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் என்று தனது பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

நடிகர் அஜீத்குமாரும் விஜயும் சமகாலத்தில் சினிமாவுக்குள் வந்தவர்கள். ஆரம்பத்தில் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்போது நடிகர் விஜய் அரசியல் இயக்கத் தலைவராகவும் இருக்கிறார். அந்த ஒரு நிலையில் சக நடிகர் அஜீத்குமாருக்கு பத்மபூஷன் விருது பெற்றதற்காகவும் அவரது பிறந்த நாளுக்காகவும் நண்பராக வாழ்த்துகளை தெரிவித்திருக்க வேண்டும். இப்படி மறந்து விட்டாரே என பலரும் விமர்சிக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்