- Advertisement -
Homeபொழுதுபோக்குபலத்த சர்ச்சைக்கு பிறகு அமரன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட அந்த காட்சி - இனியாவது இதுபோன்ற...

பலத்த சர்ச்சைக்கு பிறகு அமரன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட அந்த காட்சி – இனியாவது இதுபோன்ற காட்சிகளில் இயக்குனர் உஷாராக இருப்பாரா?

- Advertisement -

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான படம் அமரன். இந்த படத்தில் முகுந்த் வரதராஜ் என்ற கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அவருக்கு மனைவியாக சாய்பல்லவி நடித்திருந்தார். இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

தீபாவளி பண்டிகையின் போது ரிலீசான அமரன் படம், ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவு கிடைத்தது. அமரன் படம் உலக அளவில் மொத்தம் 325 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்தது. சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களில் அதிக வசூல் செய்த முதல் படம் அமரன் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் அமரன் படத்தில் ஒரு காட்சியில், கதாநாயகி சாய் பல்லவியின் மொபைல் எண் காட்டப்படும். அந்த போன் நம்பர் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் வாகீசன் என்பதற்கு சொந்தமானது. அது சாய்பல்லவியின் எண்தான் என்று கருதிய ரசிகர்கள் பலரும் வாகீசனுக்கு போன் செய்தும், மெசேஜ் அனுப்பியும் தொந்தரவு செய்துள்ளனர். இதனால் அவருக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அமரன் படத்தில் தனது செல்போன் எண்ணை பயன்படுத்தி, மன உளைச்சலை ஏற்படுத்தியதால், அமரன் படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும். இதற்கு நஷ்ட ஈடாக ரூ. 1.10 கோடி தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கூறியிருந்தார்.

- Advertisement -

மேலும் அந்த மனுவில், மொபைல் எண் வரும் காட்சியை நீக்க கோரி ஏற்கனவே அமரன் பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியும், அவர்கள் அந்த தவறை திருத்தவில்லை. அதனால் அமரன் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்கவும், தணிக்கை சான்றை ரத்து செய்யவும் வேண்டும் என்று மாணவர் வாகீசன் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் அமரன் படத்தில் மாணவரின் மொபைல் எண் இருந்த காட்சி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த காட்சியை நீக்கிய நிலையில் புதிய தணிக்கை சான்று பெறப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விளக்கம் தந்துள்ளது. மேலும் தொடர் அழைப்புகளால் தனி உரிமை பாதிக்கப்பட்டதற்கு, பொது சட்டத்தின் கீழ் நிவாரணம் கோரலாம் என சென்னை உயர்நீதிமன்றமும் தெரிவித்துள்ளது.

- Advertisement -

சற்று முன்