- Advertisement -
Homeபொழுதுபோக்குஆந்திராவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு... அக்டோபரில் வேலையை முடிக்கும் சூர்யா.. பரபரக்கும் கங்குவா பட அப்டேட்...

ஆந்திராவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு… அக்டோபரில் வேலையை முடிக்கும் சூர்யா.. பரபரக்கும் கங்குவா பட அப்டேட்…

- Advertisement -

சூரரைப் போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யா, கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கும் இந்த திரைப்படம், சூர்யாவின் 42 வது திரைப்படமாக உருவாகிறது. யூ வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் இந்த திரைப்படம், மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் பாலிவுட் நடிகை திஷா பதானி, கங்குவா திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். யோகி பாபு மற்றும் கோவை சரளா ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

- Advertisement -

பத்து மொழிகளில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. கங்குவா திரைப்படம் மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் படத்தின் முக்கிய காட்சிகள் கொடைக்கானலில் அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கப்பட்டன.

தற்காலத்துக்கும், முந்தைய பிறவிக்கும் இடையே உள்ள தொடர்பை மையமாக வைத்து கங்குவா திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கங்குவா படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது வரை தொடர்ந்து சூட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு, கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.

- Advertisement -

அதில் போர்க்களம் காட்சிகள் இடம்பெற்றிருக்க, இறுதியில் சூர்யா நலமா என ஆக்ரோஷமாக கர்ஜித்தது அவரது ரசிகர்களை புல்லரிக்கச் செய்தது. கிளிம்ப்ஸ் வீடியோ திருப்திகரமாக இருந்ததாக பலரும் தெரிவித்தனர். இதில், துணை வில்லனாக நட்டியும், முக்கிய வில்லனாக ஜெகபதி பாபுவும் நடிக்கின்றனர். ஏற்கனவே இவர் அண்ணாத்த விஸ்வாசம் திரைப்படங்களில் வில்லனாக நடித்திருந்ததால், வேறு ஆளே கிடைக்கவில்லையா என்று சிலர் இணையத்தில் பதிவிட்டனர்.

இந்த நிலையில், கங்குவா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் 16ஆம் தேதி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 நாட்கள் அங்கு சூட்டிங் நடைபெறும் என்றும், இதில் முக்கியமான காட்சிகள் படமாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அக்டோபர் மாதம் வரை சூர்யா இதன் படப்பிடிப்பில் இருப்பார் என்றும், அதன் பிறகு சுதா கொங்கரா படத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்