- Advertisement -
Homeபொழுதுபோக்குபிறந்த நாளுக்கு விஜயுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட திரிஷா, வெடித்த சர்ச்சை - சென்னையில் லிப்ட்டில்...

பிறந்த நாளுக்கு விஜயுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட திரிஷா, வெடித்த சர்ச்சை – சென்னையில் லிப்ட்டில் எடுக்கப்பட்டதா அது?

- Advertisement -

நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். அதே போல் நடிகை திரிஷாவும் முன்னணி நாயகியாக 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாக நடித்து வருகிறார். விஜயுடன் ஜோடியாக கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி, லியோ என 5 படங்களில் திரிஷா நடித்திருக்கிறார். இப்போது தி கோட் படத்திலும், விஜயுடன் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருக்கிறார்.

துவக்கத்தில் இருந்தே, விஜய்க்கும் திரிஷாவுக்கும் நெருக்கமான நட்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. கில்லி படத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட நெருக்கம், இப்போது வரை நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட காரணமே நடிகை திரிஷா தான் என்ற தகவலும் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. பல மாதங்களாக விஜய் மனைவி சங்கீதா, லண்டனில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் விஜய்க்கு நீலாங்கரையில் பங்களா உள்ளது. அதே ஏரியாவில் நடிகை திரிஷாவும் புதிய பங்களா வாங்கி குடியேறியது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதே போல் திரிஷா வீட்டில் ஒருமுறை வருமானவரித்துறை ரெய்டு நடந்த போது, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ் பிடிபட்டது. அது தனக்கு விஜய் பிறந்த நாள் பரிசாக கொடுத்தது என்று திரிஷா கூறியதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுமட்டுமின்றி, தற்போது நடிகர் விஜய் சென்னை ஆர்ஏ புரத்தில் புதிய அபார்ட்மென்டில் 8500 சதுர அடியில் பிளாட் ஒன்றை ரூ. 25 கோடிக்கு வாங்கி, அதை அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார். அந்த அபார்ட்மென்டில் இப்போது 4 வீடுகள் மட்டுமே உள்ள நிலையில், அதில் ஒரு வீட்டை நடிகை திரிஷா ரூ. 17 கோடிக்கு வாங்கியிருக்கிறார்.

- Advertisement -

நீலாங்கரையில் விஜய் வீடுள்ள அதே பகுதியில் திரிஷா பங்களா வாங்கி குடியேறியதும், இப்போது விஜய் அலுவலகம் உள்ள ஆர்ஏ புரத்தில் அதே அபார்ட்மென்ட்டில், திரிஷா வீடு வாங்கியிருப்பதும் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் வீடு, விஜய் அலுவலகம் உள்ள பகுதிகளில் தொடர்ந்து திரிஷாவும் வீடுகள் வாங்குவது பலருக்கும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

இதற்கிடையே கடந்த 22ம் தேதி, விஜய் பிறந்த நாளன்று லிப்ட் ஒன்றில் விஜயும், திரிஷாம் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, புயலுக்கு பின் அமைதி, அமைதிக்கு பின் புயல் என்ற கேப்சன் பதிவிட்டு விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அந்த புகைப்படம், இப்போது ஆர்ஏ புரத்தில் விஜய் அலுவலகம், திரிஷா வீடு இருக்கும் அபார்ட்மென்ட்டில் ஒரே லிப்ட்டில் எடுக்கப்படட்டதுதான். இருவரும் அங்கு ஒன்றாக தான் இருக்கின்றனர் என்கிற சர்ச்சையை இந்த புகைப்படம் இப்போது கிளப்பியிருக்கிறது.

- Advertisement -

சற்று முன்