- Advertisement -
Homeபொழுதுபோக்கு3 எழுத்து இட்லி நடிகை என் குடும்பத்தை கெடுக்கிறார், நான் படங்களில் நடிக்க மாட்டேன் -...

3 எழுத்து இட்லி நடிகை என் குடும்பத்தை கெடுக்கிறார், நான் படங்களில் நடிக்க மாட்டேன் – பிரஸ்மீட்டில் நடிகர் ரவிமோகன் பகிரங்க குற்றச்சாட்டு!

- Advertisement -

சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் ரவிமோகன் கூறியதாவது, என் கஷ்டத்தில் என் கூட இருந்தவர்தான் கெனிஷா. என் பசங்களுக்காக மட்டும்தான் நான் அமைதியாக இருக்கிறேன். என் வேலையே அழகான பெண்களுடன் வேலை செய்வதுதான். அப்போதெல்லாம் பெண்கள் அழகில் மயங்கி பெண்களுடன் ஓடாதவன் இப்போது 45 வயதில் ஓட போகிறேனா?

கடந்த 23 வருஷங்களாக என் மேல் ஒரு பிளாக் மார்க் கூட இல்லாமல் வாழ்ந்து வருகிறேன். என்னை நிம்மதியாக வாழ விடாமல் செய்கின்றனர். என் பெயரில் ஒரு பேங்க் அக்கவுண்ட் கூட கிடையாது. ஒரே ஒரு அக்கவுண்ட் மட்டும் தான் இருந்தது. அதுவும் என் முன்னாள் மனைவி பெயருடன் இணைந்து இருந்தது. நான் சம்பாதித்து அவர்களுக்கு கணக்கு சொல்லிக்கொண்டு இருந்தேன்.

- Advertisement -

எனக்கு சொல்ல முடியாத அளவுக்கு அநியாயம் நடந்திருக்கு. நான் ரத்த வாந்தி எடுத்துட்டு இருக்கேன். எனக்கு பிளாக் மேஜிக் வைத்துள்ளனர். நான் உயிரோடு இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். அதுவும் விரைவில் நடக்கும். அனைவரையும் முடித்துவிட்டு நான் சிரித்த முகத்தோடு செல்வேன். 3 எழுத்து இட்லி நடிகை ஒருவர் என் குடும்பத்தை கெடுக்கிறார். என்னைப் பற்றி பேச உனக்கு தகுதி இருக்கிறதா?

ஏஐ மூலம் எடிட் செய்து எனக்கு எதிராக வன்மத்தை பரப்புகிறார்கள். சைபர் துன்புறுத்தலால் பலர் உயிரிழந்துள்ளனர். என்னை அடிமையாக வைத்திருந்தார்கள். எனக்கு நடந்தது பிளாக்மெயில் திருமணம். கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்வேன் என மிரட்டி திருமணம் செய்தனர். அவர்கள் குடும்பத் தயாரிப்பு நிறுவனத்தில் மட்டுமே திரைப்படங்களில் நடிக்கச் சொன்னார்கள்.

- Advertisement -

கெனிஷா உண்மையான பெண்ணியவாதி. மற்றவர்கள் காசில் உட்கார்ந்து அவர் சாப்பிடவில்லை. முன்னாள் மனைவி குடும்பத்திற்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் மருந்துகள் செலவுக்கு நான் அனுப்பி வந்தேன். சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் எந்த வேலையும் செய்து கொண்டு பிழைத்துக் கொள்வேன். என்னை மன்னித்து விடுங்கள்.

என்னால் வேலை செய்ய முடியவில்லை. என் தனிப்பட்ட பிரச்சினையை தீர்த்த பின்னர் தான் நான் பணிக்கு வருவேன். என் விவகாரத்து தீர்ப்பு வரும் வரை நான் நடிக்கப் போவதில்லை. எனது படங்கள் இனி திரைக்கு வராது என்று நடிகர் ரவி மோகன் கூறியிருக்கிறார். தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து நடிகர் ரவிமோகன் வாழ்ந்து வரும் நிலையில் அந்த குடும்பத்தில் மூக்கை நுழைத்து பிரச்னை செய்வது 3 எழுத்து இட்லி நடிகை அது குஷ்புதான் என்று ரசிகர்கள் கமணெ்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்