நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்த படம் லால் சலாம். இந்த படத்தில் கேமியோ ரோலில் ரஜினி நடிக்கிறார். இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தியது. வரும் பொங்கல் பண்டிகைக்கு தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.
ஜெயிலர் மாஸ் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடித்துவரும் படம் வேட்டையன். இது அவரது 170வது படம். தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இதில் ரஜினி மகனாக, பகத் பாசில் நடிக்கிறார்.
அதே போல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்திலும் ரஜினியின் மகனாக விக்ராந்த் நடிக்கிறார். மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினி நடிக்கும் இந்த படத்தில், மொத்தம் 22 காட்சிகளில் ரஜினி வருகிறார். மொத்த படத்தில் 45 நிமிடங்கள் ரஜினி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால் கேமியோ ரோல் என்றால் ரஜினி ஏதோ ஓரிரு காட்சிகளில், சில நிமிடங்களில் யாரோ ஒருவராக வந்து செல்வது இல்லை. படத்தில் அவருக்கும் கேரக்டர் உள்ளது. வசனங்கள் உள்ளது. குறிப்பாக அவர் அறிமுகமாகும் காட்சியே படத்தில் மாஸ் ஆக இருக்கும் என்றும் தெரிகிறது. ஏனெனில் மொய்தீன் அறிமுகமாகும் காட்சியே சண்டை காட்சி என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கேமியோ ரோல் சென்டிமென்ட் இந்த படத்தையும் பாதிக்குமா என்ற குழப்பமும் நீடிக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் ரஜினி கேமியோ ரோலில் நடித்த படம் வள்ளி. இது மாபெரும் தோல்விப்படமாக அமைந்தது. அது குசேலன் படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதே போல் லிங்கா, கோச்சடையான் போன்ற படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு தரவில்லை.
எனவே கேமியோ ரோல் சென்டிமென்ட் பாதிப்பால், லால் சலாம் படமும் பிளாப் வரிசையில் இடம்பெறுமா என்றால், நிச்சயம் அதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் இது ரஜினி படம்தான். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுவதுமே அவர் வரும் காட்சிகள் இருப்பதால், அது ரஜினி படம் பார்த்த திருப்தியை தான் ரசிகர்களுக்கு தரப்போகிறது. அதனால் லால் சலாம் மொய்தீன் பாய், சாதனை படைப்பார் என்றும் நம்பப்படுகிறது.





