- Advertisement -
Homeபொழுதுபோக்குசத்யபாமா பேசியது ஏஐ வீடியோவாம், ஆனா அவங்களே வீடியோ எடுத்த ஆளை கண்டுபிடிச்சதா சொல்லிட்டாங்களே? ரொம்ப...

சத்யபாமா பேசியது ஏஐ வீடியோவாம், ஆனா அவங்களே வீடியோ எடுத்த ஆளை கண்டுபிடிச்சதா சொல்லிட்டாங்களே? ரொம்ப உருட்டாதீங்க ப்ரோ? – அமைச்சரை கலாய்த்த நெட்டிசன்கள்!

- Advertisement -

தாராபுரம் இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று நடந்து முடிந்துள்ளது. இதில் தவெக வேட்பாளர் சத்யபாமா உட்பட அதிமுக திமுக நாதக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என நான்கு முனை போட்டி உள்ளது. வரும் 9ம் தேதி பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் தவெக வேட்பாளர் சத்யபாமா பேசிய ஒரு வீடியோ இன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் யாரோ சில கட்சி நிர்வாகிகளிடம் பேசும் சத்யபாமா, போன தேர்தலுக்கு 31 கோடி ரூபாய் செலவு செய்தேன். இந்த முறை ஓட்டல் சாப்பாடு மட்டும் 14 லட்சம் ரூபாய் வரை ஆகி விட்டது.

- Advertisement -

அதுவும் தவெக அமைச்சர்கள் கட்சிக்காரர்களுக்கு ஓட்டல் ரூம் போட்ட செலவு மட்டும் நான்கரை லட்சம் ரூபாய் ஆகி விட்டது. நாமும் ஒரு கேடரில் இருப்பதால் அவர்கள் கேட்பதை செய்யாமல் இருக்க முடியவில்லை என்று கோபமாக பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

அந்த வீடியோவை பார்த்தால் ஏஐ தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. செல்போன் கேமராவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று வாக்கு சாவடியில் ஓட்டுப் போட்டு விட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் சத்யபாமா அது சித்தரிக்கப்பட்ட வீடியோ என்று கூறினார்.

- Advertisement -

ஆனால் அப்போது அவரே அந்த வீடியோவை எடுத்தது யார் என்று எங்களுக்கு தெரியும். அவரை கண்டுபிடித்து விட்டோம் என்றும் கேமரா முன்பு வாய்தவறி கூறியிருக்கிறார். இதன்மூலம் அவரே உண்மையை ஒத்துக்கொண்ட நிலையில், ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களிடம் பேசுகையில், இது ஏஐ வீடியோ நானும் இதுபோல் ஏஐ வீடியோ எடுத்து காட்டட்டுமா, என்று சவால் விடுத்து பேசியிருக்கிறார்.

தவெக வேட்பாளர் சத்யபாமா பேசும் போது அங்கு இருந்த ஒருவர்தான் இதை வீடியோவாக எடுத்து தவெக வாட்சப் குரூப்பில் பரவ விட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அதனால் தவெக குறித்து அதிருப்தியில் உள்ள சத்யபாமாவின் முன்னாள் அதிமுக ஆதரவாளர்கள் தான் இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டுள்ளனர். அதுவும் தவெக அமைச்சர்கள், கட்சிக்காரர்களுக்கு ரூம் போடவும் சாப்பிடவும் 14 லட்சம் ரூபாய் சத்யபாமா செலவு செய்திருப்பதாக கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்