- Advertisement -
Homeபொழுதுபோக்குஃபேமிலி ஆடியன்ஸ் பார்க்க முடியலையே… நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்துக்கு யு/ஏ சான்றிதழ் -...

ஃபேமிலி ஆடியன்ஸ் பார்க்க முடியலையே… நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்துக்கு யு/ஏ சான்றிதழ் – கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் கடந்த 14ம் தேதி உலகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. கூலி படத்துக்கு சென்சார் கோடு ஏ சான்றிதழ் வழங்கி இருந்தது. அதனால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தியேட்டர்களில் கூலி படத்தை பார்க்க அனுமதிக்கப்படவில்லை இதனால் வசூல் கடுமையாக பாதித்தது.

ஏனெனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்களுக்கு எப்போதுமே ஃபேமிலி ஆடியன்ஸ் வரவேற்பு அதிகமாக இருக்கும். மனைவி பிள்ளைகளோடு பலரும் குடும்பம் குடும்பமாக தியேட்டர்களுக்கு வந்து ரஜினி படங்களை பார்த்து சந்தோஷப்படுவது தான் வழக்கம். அதனால் வார இறுதி நாட்களில் விடுமுறை நாட்களில் வசூல் பலமடங்கு அதிகரிக்கும்.

- Advertisement -

ஆனால் கூலி படத்தை அப்படி வழக்கம் போல பேமிலி ஆடியன்ஸ் பார்க்க முடியவில்லை. அது மட்டும் இன்றி தொலைக்காட்சியிலும் கூலி படத்தை ஒளிபரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் யு /ஏ சான்று வழங்கப்பட்ட படத்தை டிவியில் ஒளிபரப்ப முடியாது. கூலி படத்தில் இடம்பெற்ற சில வன்முறை காட்சிகள் பெண்கள், குழந்தைகள் பார்க்க கூடாதவையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கூலி படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க சென்சார் போர்டுக்கு உத்தரவிடக் கோரி சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தமிழ் படங்களில் சண்டைக் காட்சிகள் இல்லாத படங்களை பார்க்க முடியாது.

- Advertisement -

கூலி படத்தில் மோசமான வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன. மது அருந்தும் காட்சிகள் மறைக்கப்பட்டுள்ளன. சென்சார் போர்டு தெரிவித்த நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. எனவே கூலி படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதற்கு தணிக்கை குழு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தணிக்கை குழு சான்றிதழை முதலில் ஏற்றுக்கொண்ட படக்குழு, இப்போது யு/ஏ சான்றிதழ் கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளது. படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்குவது என அனைத்து குழுக்களும் சேர்ந்து ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. வன்முறை காட்சிகளை முழுமையாக நீக்கிவிட்டு யு/ஏ சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தது. அதனால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

- Advertisement -

சற்று முன்