நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை தொடர்ந்து இப்போது தனது 171வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்துக்கு கூலி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் 38 ஆண்டுகளுக்கு பின் நடிகர் சத்யராஜ் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். அவர்கள் இருவரும் கடைசியாக இணைந்து நடித்த படம் மிஸ்டர் பாரத். மேலும் சவுபின் சாகிர் அமீர்கான் உபேந்திரா நாகர்ஜூனா ஸ்ருதிஹாசன் அபிராமி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
சென்னை ஐதராபாத் விசாகபட்டணம் தாய்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் கூலி படப்பிடிப்பு நடந்துள்ள நிலையில் இதுவரை 70 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அடுத்த மாதம் மார்ச் இறுதிக்குள் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு கார்த்தி நடிப்பில் கைதி 2 படப்பிடிப்பை லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார்.
கூலி படம் ஸம்மர் காலகட்டத்தில் அதாவது மே மாதத்தில் திரைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது கூலி படத்தின் ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது சூப்பர் ஸ்டார் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
அதாவது கடந்த 2023ம் ஆண்டில் அக்டோபர் 10ம் தேதி சன் பிக்சர்ஸ் தயாாிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஜெயிலர். மிக விரைவில் ஜெயிலர் 2 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. கூலி படப்பிடிப்பை முடித்துவிட்டு ஜெயிலர் 2 ஷூட்டிங்கில்தான் ரஜினி பங்கேற்க உள்ளார்.
ஜெயிலர் படம் போலவே கூலி படமும் மாபெரும் ஹிட் ஆகும் விதமாக ஜெயிலர் படம் ரிலீஸ் ஆன அதே நாளில் அதாவது வருகிற அக்டோபர் மாதம் 10ம் தேதி கூலி படத்தை ரிலீஸ் செய்வது என சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயகன் படம், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தள்ளிப் போன நிலையில் கூலி படம் அக்டோபரில் வருவதால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.





