- Advertisement -
Homeபொழுதுபோக்குஆகஸ்ட் 14ம் தேதி கூலி படம் ரிலீஸ்…. அட இப்படி ஒரு சென்டிமென்ட் இருக்கிறதா? ஆச்சரியத்தில்...

ஆகஸ்ட் 14ம் தேதி கூலி படம் ரிலீஸ்…. அட இப்படி ஒரு சென்டிமென்ட் இருக்கிறதா? ஆச்சரியத்தில் துள்ளிக் குதித்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்தாண்டில் வெளியான படம் வேட்டையன். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் உலகளவில் ரூ. 265 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இந்த படத்தில் அமிதாப் பச்சன் ராணா டகுபதி பகத் பாசில் போன்ற முக்கிய நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

வேட்டையன் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்திருக்கிறார். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் அமீர்கான் சத்யராஜ் உபேந்திரா நாகர்ஜூனா ஸ்ருதிஹாசன் நித்யா ராம் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.

- Advertisement -

கூலி படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் அந்த படத்தின் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் விரைவில் துவங்க உள்ளது. இதற்கிடையே நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு துவங்கிய நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அந்த படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார். சென்னை ஐதராபாத் நகரங்களில் இந்த படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி உலகம் முழுவதும் கூலி படம் ரிலீஸாகிறது. ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான இந்த படம் நிச்சயமாக ரூ. 1000 கோடி வசூலித்த முதல் தமிழ் படமாக அமையும் என்று ரஜினி ரசிகர்கள் உறுதியாக கூறி வருகின்றனர்.

- Advertisement -

அதுமட்டுமின்றி நடிகர் ரஜினிகாந்துக்கு அவரது சினிமா பயணத்தில் இது 50வது ஆண்டாக பொன்விழா ஆண்டாக உள்ளது. கடந்த 1975ம் ஆண்டில் கே பாலசந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் படம் மூலம் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த வகையில், 2025ம் ஆண்டில் ரஜினி தனது சினிமா வாழ்வில் 50வது பொன்விழா ஆண்டில் உள்ளார்.

அதே நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸாகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் ரஜினி நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள் படமும் 1975ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி தான் ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஒருநாள் வித்யாசத்தில் அபூர்வ ராகங்கள் படம் வெளியான அதே ஆகஸ்ட் மாதத்தில் கூலி படம் 50 ஆண்டுகளுக்கு பின் ரிலீஸ் ஆகிறது. இந்த சென்டிமென்ட் சூப்பர் ஸ்டார் ரசிகர்களை துள்ளிக் குதிக்க வைத்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்