- Advertisement -
Homeபொழுதுபோக்கு6 நாட்களில் கூலி படம் வசூல் நிலவரம்… நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் வசூலை...

6 நாட்களில் கூலி படம் வசூல் நிலவரம்… நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் வசூலை முந்தினாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் கடந்த 14ம் தேதி வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் ரிலீஸானது. முதல் நாளில் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ. 151 கோடியாக இருந்தது. இது லியோ படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 148 கோடி என்பதால் லியோ படத்தை விட ரூ. 3 கோடி அதிகம் என்றும் சொல்லப்பட்டது.

அதே நேரத்தில் லியோ மற்றும் கூலி என 2 படங்களுக்குமே இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் என்பதும் ரசிகர்கள் மத்தியில் பெருமையாக பேசப்பட்டது. ஆனால் லியோ படத்தை போலவே கூலி படத்துக்கும் கடுமையான நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக கதை திரைக்கதை லாஜிக் மிஸ்டேக் என லியோ படத்தை காட்டிலும் கூலி அதிக எதிர்மறை விமர்சனங்களில் சிக்கியது.

- Advertisement -

குறிப்பாக சத்யராஜ் கேரக்டர் அவர் கண்டுபிடிக்கும் எலக்ட்ரிக்கல் சேர் அவரது மகளாக வரும் ஸ்ருதிஹாசன், கூலியாக இருக்கும் ரஜினிகாந்த் நடத்தும் பல கோடி ரூபாய் மதிப்பிலான மேன்சன் உள்ளிட்டவை குறித்தும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த படத்தை பொருத்த வரை பாராட்டை பெற்ற ஒரே நடிகர் மலையாளத்தில் இருந்து வந்த சௌபின் சாஹிர்தான்.

இந்த படத்தை பொருத்த வரை ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது அவரது வில்லன் நடிப்புதான். நாகர்ஜூனா உபேந்திரா அமீர்கான் என படத்தில் பல ஸ்டார் நடிகர்கள் இருந்தாலும் அவர்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டு ரசிகர்களின் மனதில் ஒட்டிக்கொண்டவர் சௌபிர் சாஹிர் மட்டுமே. அதே போல் நடிகை ரக்சிதா ராம் சில காட்சிகள் என்றாலும் வில்லி நடிப்பில் அசத்தி இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் கூலி படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் 4 நாட்களில் கூலி படம் 404 கோடி ரூபாய் வசூலித்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. இது லியோ படத்தை விட ரூ. 50 லட்சம் அதிகம் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் விஜய் நடித்த லியோ படம் 4 நாட்களில் 403.50 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல் உள்ளது. அதன்படி பார்த்தால் கூலி வசூலில் லியோவை முந்தி விட்டது.

மேலும் இப்போது கூலி படத்தின் 6 நாட்கள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி 6 நாட்களில் கூலி படம் உலகளவில் ரூ. 425 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி 2 நாட்களில் ரூ. 21 கோடிதான் வசூலித்திருக்கிறதா என்ற கேள்வியும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. அதே நேரத்தில் 6 நாட்களில் லியோ படம் 421 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், கூலி படம் ரூ. 4 கோடி கூடுதலாக வசூலித்து முந்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்