- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது கூலி திரைப்படத்தில் பூஜா ஹெக்டே பாடலில் அவர் இருக்க மாட்டாரா... தலைவர் ரசிகர்களுக்கு இடியாய்...

என்னது கூலி திரைப்படத்தில் பூஜா ஹெக்டே பாடலில் அவர் இருக்க மாட்டாரா… தலைவர் ரசிகர்களுக்கு இடியாய் இறங்கிய தகவல்…

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். படத்தில் அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் கூலி திரைப்படத்திலிருந்து சிக்குடு பாடலின் இரண்டு வரிகள் மட்டும் வெளியானது.

அதில் தாளம் போட வைக்கும் இசையும், ரஜினிகாந்தின் நடன அசைவுகளும் காண்போரை குதூகலிக்க வைத்தன. youtube ஐ தாண்டி பலரும் இன்ஸ்டாகிராமில் இந்த பாட்டுக்கு வீடியோ வெளியிட்டு மகிழ்ந்தனர். இது ஒரு பக்கம் இருக்க படப்பிடிப்பை தீவிரமாக நடத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

கிட்டத்தட்ட இதன் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதில் ரஜினிகாந்த் தேவா என்னும் கதாபாத்திரத்தில் வர அவருக்கு நண்பராக ராஜசேகர் என்னும் ரோலில் வருகிறார் சத்யராஜ். இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திரைப்படத்தில் பணியாற்றுகிறார்கள்.

சத்யராஜின் மகள் கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் வருகிறாராம். இதுபோக படத்தில் வில்லன்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, மலையாள நடிகர் சோபின் சாஹிர், கன்னட நடிகர் உபேந்திரா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். மிக முக்கியமாக அமீர்கான் படத்தில் இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

- Advertisement -

ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதேசமயம் ஜெய்பூரில் சூட்டிங் நடைபெற்ற போது அதில் அமீர்கான் கலந்து கொண்டதாக கூறி அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகின. அனேகமாக கூலி திரைப்படம் ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியாகலாம் என்று திரைத்துறை வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.

மார்ச் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் கூலி திரைப்படத்திலிருந்து டீசர் வெளியாவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சென்னையை அடுத்த எண்ணூரில், நடிகை பூஜா ஹெக்டே உடனான பாடல் படமாக்கப்பட்டு வருகிறதாம். ஆனால் இதில் அவருடன் இணைந்து நாகர்ஜுனா தான் பங்கேற்று உள்ளாராம். ஜெயிலர் படத்தில் வெற்றி பெற்ற காவாலையா பாடல் போன்று இது இருக்கும் என்று சொல்கிறார்கள். இதைக் கேள்விப்பட்டு ரஜினி ரசிகர்கள் மகிழ்ந்தாலும் தங்கள் சூப்பர் ஸ்டார் இந்த பாடலில் இல்லையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்