- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படத்தின் பெயரை மீண்டும் மாற்றிய படக்குழு… இந்தியில் பவர்புல் டைட்டிலில் வெளியாகுது - தமிழுக்கும்...

கூலி படத்தின் பெயரை மீண்டும் மாற்றிய படக்குழு… இந்தியில் பவர்புல் டைட்டிலில் வெளியாகுது – தமிழுக்கும் இதையே வெச்சிடுங்க பாஸ்!

- Advertisement -

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் கூலி. இந்த படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. கூலி படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற சிக்குடு என்ற பாடல் 2 தினங்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

சிக்கிடு பாடல் காட்சியில் இசையமைப்பாளர் அனிருத் சாண்டி மாஸ்டர் மற்றும் சீனியர் நடிகர் இயக்குனர் டி ராஜேந்தர் ஆகியோர் இணைந்து நடனமாடி அசத்தியிருக்கிறார்கள். வரும் ஆகஸ்ட் 14ம் தேதி கூலி படம் வெளியாகும் நிலையில், ஹிர்த்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த வார் 2 என்ற படமும் வெளியாக உள்ளது. அதனால் வட மாநிலங்களில் கூலி படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இந்தியில் 1983ம் ஆண்டில் வெளியான கூலி என்ற படத்தில் பாலிவுட் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். அதற்குப் பிறகு கடந்த 2020ம் ஆண்டில் இந்தி நடிகர் வருண் தவான் நடித்த கூலி நம்பர் 1 என்ற பெயரில் இந்தியில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் ரஜினிகாந்த் நடிப்பில் இந்தியில் கூலி என்ற டைட்டிலில் படம் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து கூலி படத்திற்கு இந்தியில் மட்டும் மஜதூர் என டைட்டில் மாற்றப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த தலைப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. மஜதூர் என்ற டைட்டில் மிகவும் சாதாரணமாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். மேலும் படத்தின் தலைப்பை வைப் தரும் விதமாக வேறு விதமாக மாற்ற வேண்டும் என்றும் ரசிகர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தனர்.

- Advertisement -

இதனை ஏற்றுக் கொண்ட படக்குழு, தற்போது கூலி படத்தின் இந்தி டைட்டிலை கூலி தி பவர் ஹவுஸ் என மாற்றியுள்ளது. கூலி தி பவர்ஹவுஸ் என்ற டைட்டில் மிகவும் மாஸ் ஆக இருப்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதுதான் ரஜினி போன்ற மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு சரியான அதிரடியான டைட்டில் எனவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள கூலி படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா இந்தி நடிகர் அமீர்கான் கன்னட நடிகர் உபேந்திரா மற்றும் மலையாள நடிகர் சௌபிர் ஷாகிர் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். மேலும் சத்யராஜ் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் அமீர்கான் கேமியோ ரோலில் நடித்திருப்பதாகவும் 15 நிமிடங்கள் அவர் வரும் காட்சிகள் படத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த இந்தி பட டைட்டிலையே தமிழுக்கும் வைத்துவிடுங்கள் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்