- Advertisement -
Homeபொழுதுபோக்குவில்லங்கத்தில் சிக்கிய பாகுபலி நாயகன் பிரபாஸ், பாலிவுட் சீனியர் ஸ்டார் அமிதாப் பச்சன் - இருவருக்கும்...

வில்லங்கத்தில் சிக்கிய பாகுபலி நாயகன் பிரபாஸ், பாலிவுட் சீனியர் ஸ்டார் அமிதாப் பச்சன் – இருவருக்கும் கோர்ட் நோட்டீஸ் வந்ததால் பரபரப்பு…!

- Advertisement -

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் பாகுபலி. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளிவந்த பாகுபலி படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, பான் இந்தியா ஸ்டார் நடிகராக பிரபாஸ் மாறிவிட்டார். கடந்த மாதத்தில் அவரது நடிப்பில் கல்கி 2989 ஏடி படம் வெளியானது.

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் 740 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ. 1000 கோடி வசூலை கடந்து பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். புராண கதையை அடிப்படையாக கொண்டு அறிவியல் புனைவு கதையாக கல்கி படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை பொருத்தவரை, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே எழுந்தன. குறிப்பாக ஆந்திராவில் கொண்டாடப்பட்ட அளவுக்கு இந்த படத்துக்கு தமிழகம், மற்றும் கேரளத்தில் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை. அதே நேரத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு, அதில் வரும் கல்கி அவதாரத்தை கதைக்களமாக்கி எடுக்கப்பட்ட இந்த படம், முதல் பாகம் மட்டுமே வெளிவந்துள்ளது. அடுத்து 2ம் பாகம் வெளிவர இருக்கிறது. ஆனால் முதல் பாகத்திலேயே பல விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. அறிவியல் புனைவு கதையில் புராணத்தை கொண்டு வந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், கல்கிதாம் மடாதிபதி ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம், கல்கி 2898 ஏடி படம், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின், நடிகர்கள் பிரபாஸ், அமிதாப் பச்சன் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அவரது சார்பில், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் உஜ்ஜாவல் ஆனந்த் சர்மா அனுப்பியுள்ள நோட்டீஸில், இந்தியா நம்பிக்கை மற்றும் பக்தி நிறைந்த நாடு. சனாதான தர்மத்தின் மதிப்புகளை சிதைக்க கூடாது. வேதங்களை மாற்றக் கூடாது. கல்கி அவதாரம் பற்றி புராணங்களில் கூறப்பட்டுள்ளதற்கு முரணாக, இந்த படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது தவறான புரிதலுக்கும், விளக்கத்துக்கும் வழிவகுக்கும். புனித நூல்களை தவறாக சித்தரிக்க யாருக்கும் உரிமை இல்லை, என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

சற்று முன்