- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குநர் பாலாவுக்கு இப்படி ஒரு பிரச்னையா? - போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

இயக்குநர் பாலாவுக்கு இப்படி ஒரு பிரச்னையா? – போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

- Advertisement -

தமிழ் சினிமாவில், சிறந்த படங்களை தந்து வருபவர் இயக்குநர் பாலா. இவரது பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு துவங்கி, சிலர் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, தனது பெயரை பயன்படுத்தி, தவறான செயல்களில் ஈடுபட்டுள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, இயக்குநர் பாலா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தது,. பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில், மிக வித்யாசமான கதைக்களங்களில் படங்களை தந்து ரசிகர்களை பிரமிக்க வைப்பவர் இயக்குநர் பாலா. சேது, நந்தா, பிதாமகன், பரதேசி, அவன் இவன் என பாலாவின் படங்கள் ரசிகர்களால் வெகுவாக வரவேற்கப்பட்டவை. விரைவில், பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘வணங்கான்’ படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இயக்குநர் பாலா பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு துவங்கப்பட்டு, அதில் சிலர் தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த இயக்குநர் பாலா, சென்னையில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.

புகாரில் இயக்குநர் பாலா கூறியிருப்பதாவது,
எனக்கு இன்ஸ்டாகிராமில் எந்த கணக்கும் கிடையாது. அதனால், மோசடி நபர்களிடம் யாரும் ஏமாற வேண்டாம். போலியான நபர்கள் என் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு உருவாக்கி புகைப்படங்கள், தகவல்களை பரப்பி வருகின்றனர், இந்த போலி கணக்கை உடனடியாக முடக்க வேண்டும். இதில் தொடர்புடைய மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக குறுஞ்செய்தி அனுப்பி, இளம்பெண்களிடம் தவறான நோக்கத்தில் பேசி இருக்கின்றனர். மேலும், அந்த பெண்களிடம் கவர்ச்சி புகைப்படங்களை அனுப்புமாறு கேட்டுள்ளனர். எனது படங்களில் நடிக்க, சம்பந்தப்பட்டவர்களை எனது உதவி இயக்குநர்கள், மேலாளர்கள் நேரடியாக தொடர்பு கொள்வதே வழக்கமாக இருக்கிறது.

அதனால், சினிமாவில் நடிக்க ஆர்வம் உள்ளவர்கள், இதுபோன்ற போலியான நபர்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது. விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். பிரபல நடிகர், நடிகையர் பெயரில் கணக்கு துவங்கி இப்படி மோசடி செய்வது, பணம் கேட்பது போன்ற சைபர் க்ரைம் குற்றங்கள் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகிறது. இதில், இப்போது இயக்குநர் பாலாவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

சற்று முன்