- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை திரிஷாவுக்கு நீண்ட நாட்களாக இப்படி ஒரு பிரச்னையா? குந்தவைக்கு ஏற்பட்ட குழப்பத்துக்கு தீர்வு தந்ததா...

நடிகை திரிஷாவுக்கு நீண்ட நாட்களாக இப்படி ஒரு பிரச்னையா? குந்தவைக்கு ஏற்பட்ட குழப்பத்துக்கு தீர்வு தந்ததா நீதிமன்றம்? – இதுவரைக்கும் மதில் மேல் பூனையா தவிச்சுட்டாரோ?

- Advertisement -

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்த திரிஷாவை பார்த்து இப்படி ஒரு அழகா என அசந்து போன ரசிகர்கள் ஏராளம். அதன்பிறகு குந்தவை என்றே திரிஷாவை அழைக்க ஆரம்பித்து விட்டனர்.

பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து, லியோ விடாமுயற்சி குட்பேட் அக்லி என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை திரிஷா. சமீபத்தில் வெளியான விஜய் நடித்த தி கோட் இடத்தில் மட்ட என்ற பாடலுக்கு நடிகை திரிஷா குத்தாட்டம் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாராவுக்கு போட்டியாளராக கருதப்படுகிறார். எனினும் நயன்தாரா திருமணம் செய்து பேமிலியில் செட் ஆன போதிலும், திரிஷா இன்னும் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.

நடிகை திரிஷா, சென்னையில் வசிக்கிறார். செனடாப் ரோடு இரண்டாவது தெருவில் அவரது வீடு உள்ளது. இந்த வீட்டின் கட்டிடத்தை பாதிக்கும் வகையில் பக்கத்து வீட்டுக்காரர் மெய்யப்பன் என்பவர், இருவருக்கும் பொதுவான காம்பவுண்ட் சுவரை இடித்து கட்டுமானம் மேற்கொள்ள கூடாது. அதற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு திரிஷா தொடர்ந்து இருந்தார்.

- Advertisement -

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்றம், அந்த காம்பவுண்ட் சுவரை இடிக்க கூடாது என இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது திரிஷா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்கள் தரப்பிலும் மெய்யப்பன் தரப்பிலும் மதில் சுவர் விவகாரம் தொடர்பாக சமரசமாக பேசி முடிக்கப்பட்டுவிட்டது.

அதனால் மேற்கொண்டு இந்த வழக்கை தொடர்ந்து நடத்த விருப்பம் இல்லை என்று தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தற்போது திரிஷா தொடர்ந்த வழக்கை முடித்து வைத்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நடிகை திரிஷா செலுத்திய கட்டண தொகையை அவருக்கு திரும்ப கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மதில் மேல் பூனையாக இருந்த விவகாரம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்